விஜய் சேதுபதி, சூர்யாவை தொடர்ந்து தளபதி 67ல் வேற லெவல் நடிகரை களமிறக்கும் லோக்கி (வில்லனா ? )

0
596
lokesh
- Advertisement -

தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் பிரபலம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தளபதி 66 படம்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு:

ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் கமலின் நடிப்பில் உருவாகி இருந்த விக்ரம் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

விக்ரம் படம்:

இந்த படம் வெளியாகி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அதோடு விக்ரம் படம் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜயை வைத்து தளபதி 67 என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்தது. ஆனால், இன்னும் இந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

தளபதி 67 படம்:

இந்த நிலையில் தளபதி 67 படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் தனுஷ் நடிக்கப் போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஒருவேளை தனுஷ்-விஜய் கம்போ வந்தால் கூட நல்லா தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement