கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்து இருக்கிறது. மேலும், இன்று ரஜினிகாந்த் உடைய 73 வது பிறந்தநாள். இதை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
https://twitter.com/its_ViswaDfan/status/1734400167812493494
அது மட்டும் இல்லாமல் இந்திய சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலருமே நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகரும், ரஜினியின் வெறித்தனமான ரசிகருமான தனுஷ் அவர்கள் அதிகாலை ஒரு மணிக்கு சோசியல் மீடியாவில் 'ஹாப்பி பர்த்டே தலைவா ரஜினிகாந்த்' என்று பதிவிட்டு ஹார்டின் எமோஜிகளையும் பறக்க விட்டிருக்கிறார்.
தனுஷ் பதிவு:
நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதைத் தாண்டி மருமகனும் ஆவார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை, தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர். பின் இவர் 3 ,வை ராஜா வை போன்ற சில படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் நட்பே நட்பே என்ற பாடலையும் இவர் பாடியிருக்கிறார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
https://twitter.com/KABiLANS7/status/1734382619838783980
தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து:
இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 18 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிவதாக அறிவித்தது ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் சர்ச்சையாகி இருந்தது. மேலும், இவர்களை சேர்த்து வைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
தனுஷ்-ஐஸ்வர்யா திரைப்பயணம்:
ஆனாலும், பலன் இல்லை. மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா அவர்கள் லால் சலாம் என்ற படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் தனுஷ் படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது ரஜினியின் பிறந்தநாளுக்கு தனுஷ் பதிவிட்டு இருக்கும் வாழ்த்துப் பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
https://twitter.com/kavalan_rajini/status/1734400293834522971
ரஜினி திரைப்பயணம்:
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படம் உலக அளவில் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது. இந்தப் படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் லால் சலாம். பின் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்க இருக்கிறார். தற்போது அந்த படத்தில் காண வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.





