தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது. 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். பின் இவர் தனுஷை வைத்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என ப்ளாக் பஸ்டர் படங்களை தந்து உள்ளார்.

அனைத்துமே மாஸ்டர் பீஸ் படங்கள் தான். மேலும், தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் முதன் முதலில் வெளியான படம் பொல்லாதவன். ஆனால், அதற்கு முன்னரே தனுஷை வைத்து வெற்றிமாறன்அவர்கள் ‘தேசிய நெடுஞ்சாலை’ எனும் திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. பின் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.

இதையும் பாருங்க : மியா கலீபாவுடன் ஒப்பிட்ட ரசிகர்கள் – Vj பார்வதி வெளியிட்ட வீடியோ.

Advertisement

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன் முதலாக நடித்து கைவிடப்பட்ட படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தனுஷ் அவர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் முதலில் தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது.

தற்போது இப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருப்பினும் வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த ‘தேசிய நெடுஞ்சாலை’ படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிமாறன் என்பவர் சித்தார்த்தை வைத்து ‘உதயம் என்.ஹெச்.4 என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement