ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு யோகா போஸ் கொடுத்து அசத்திய தனுஷின் மனைவி.

0
1428
dhanush
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷ், தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம், மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘3’ படத்தில் இவர் பாடிய “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் வேற லெவல்ல உலக முழுவதும் உள்ள ரசிகர்களை தெறிக்காவிட்டது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த படத்தினை தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் யாத்ரா , இளையமகன் லிங்கா ஆவார்.

- Advertisement -

மேலும், தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கி வருகிறார். இவர் 3 ,வை ராஜா வை, சினிமா வீரன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் நட்பே நட்பே என்ற பாடலை பாடியிருக்கிறார். மேலும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகை ரீமா சென்னுக்கு டப்பிங் கொடுத்ததும் அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அடிக்கடி தனது சாமி படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் யோகாசனம் செய்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பொதுவாக நடிகைகள் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வழக்கம் .ஆனால், ஐஸ்வர்யா தனுஷின் இது போன்ற புகைப்படங்களை வெளியிட துவங்கி இருப்பதை கண்டு ரசிகர்கள் கொஞ்சம் உயர்ந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement