முதன் முறையாக தனது அக்காவின் குடும்பத்தாருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..

By Rajkumar · 16/10/2019

"ஒய் திஸ் கொலவெறி" என்ற பாடல் மூலம் இந்த உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவர் நடிகர் தனுஷ். தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'துள்ளுவதோ இளமை' என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு முதன் முதலாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம்,மாரி,வேலையில்லா பட்டதாரி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.தனுஷ் ஒரு நடிகர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டு உள்ளவர். அது மட்டும் இல்லைங்க இவர் 2011 ஆம் ஆண்டு '3' படத்தில் பாடிய "ஒய் திஸ் கொலவெறி" பாடல் வேற லெவல்ல ரசிகர்களை தெறிக்காவிட்டாரு என்று கூட சொல்லலாம். தனுஷ் அவர்கள் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகன் ஆவார். அது மட்டும் இல்லைங்க இயக்குனர் செல்வராகவனின் சகோதரரும் ஆவார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் அதாவது அவருடைய மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லைங்க நம்ம தனுஷ் அவர்கள் பாலிவுட்டில் கூட ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.அதோடு தனுஷ் குறுகிய கால அளவில் புகழின் உச்சத்திற்கு சென்று உள்ளார். இவர் தன்னுடைய நடிப்பிற்காக பல பட்டங்களையும், விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் தனுஷ் அவர்களின் குடும்ப புகைப்படங்களை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால்,தற்போது தனுஷ் அவர்கள் தன் அக்காவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.மேலும், சமூகவலைத்தளங்களில் தன் அக்கா உடனும், குடும்பத்துடனும் சேர்ந்து தனுஷ் எடுத்த புகைப்படம் வைரலாக இருக்கிறது.

இதையும் பாருங்க : 24 மணி நேரமும் குடியும் குடித்தனமானாக இருக்கும் மீரா.. ஆணுடன் பப்பில் போட்ட மோசமான ஆட்டம்..

தனுசுக்கு அண்ணன் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், தனுஷுக்கு இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள். மேலும், தனுஷ் இதுவரை தன்னுடைய அக்காக்கள் பத்தி எங்கேயுமே பேசியதில்லை.ஒரு அக்கா பெயர் விமலா கீதா. இவர் பல் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு மருத்துவ கல்லூரியில் பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இன்னொரு அக்காவின் பெயர் கார்த்திகா தேவி. இவரும் ஒரு மருத்துவர்தான். இவர் தற்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன.

மேலும், இந்த புகைப்படத்தை பார்த்து தனுஷிற்கு இவ்வளவு அழகாக! அக்கா உள்ளார்கள் என்றும் கூறிவருகிறார்கள் ரசிகர்கள். தனுஷிற்கு இவ்வளவு பெரிய குடும்பமும் இருக்கிறதா! என்று வியந்தும் உள்ளார்கள் ரசிகர்கள். மேலும், இத்தனை நாட்களாக ஏன் இந்த தகவலை கூறவில்லை என்றும் கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.ஒட்டுமொத்த குடும்பத்துடன் தனுஷ் அவர்கள் சந்தோஷமாக கொண்டாடி வருகின்றார்.தனுஷ் அவர்கள் குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையங்களில் பதிவிட்டு உள்ள தகவல் வைரலாக பரவி வருகிறது.

மேலும், இந்த புகைப்படத்தில் தனுஷ் உடன் அவங்க அக்கா மட்டும் இல்லைங்க தனுஷோட அண்ணன் செல்வராகவன் குடும்பமும் உள்ளார்கள். மேலும், இந்த புகைப்படத்தில் தனுஷின் அம்மா மற்றும் பல உறவினர்கள் உள்ளார்கள்.இந்நிலையில் தனுஷின் நடிப்பில் தற்போது வெளிவந்த "அசுரன்" படம் மாஸ் காட்டுகிறது. தனுஷ் எப்பவுமே சொல்ற மாதிரி இந்த படத்துலயும்' செஞ்சிருக்காரு'. அசுரன் படம் அசுர வசூல் வேட்டையும் செய்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் தன்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாடி இருந்த தருணங்களில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full