பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 3 சீசன் களை கடந்துள்ளது இந்த மூன்று சீசன்களில் ரசிகர்கள் பல்வேறு போட்டியாளர்களை கண்டிருப்பார்கள். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டுள்ள மீராமிதுன் கண்டுதான் ரசிகர்கள் இப்படி ஒரு போட்டியாளரை கண்டதே இல்லை என்று புலம்பி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மீராமிதுன் பல்வேறு சர்ச்சையான மற்றும் போலியான விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னராகவே இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகி இருந்தது. அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதும் சேரன் விஷயத்தில் இவர் செய்த போலித்தனமான விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மீராமிதுன் புலம்பி கொண்டு தான் வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீராமிதுன் பல்வேறு சர்ச்சையான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மது அருந்தும் புகைப்படம் ஒன்றை மீராமிதுன் பதிவிட்டிருந்தார். மேலும் , அந்த புகைப்படத்தை விளக்கமளித்த மீராமிதுன் பீர் ஒன்றும் கெட்ட பழக்கம் கிடையாது அது வெறும் பார்லி தண்ணீர் தான் என்றும் மிகவும் சாதாரணமாக கூறியிருந்தா.ர் இந்த பதிவினை கண்ட பல்வேறு ட்விட்டர் வாசிகளும் மீரா மிதுனை கழுவி ஊற்றி வந்தனர். ஆனால், அப்போதும் அடங்காத மீராமிதுன் அடிக்கடி புகைபிடிக்கும் புகைப்படம், மது அருந்தும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் நடனம் என்ற பெயரில் ஆண்களுடன் ஒட்டி உரசி மிகவும் நெருக்கமாக நடனமாடும் வீடியோக்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
மேலும் இவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் இரவு நேரங்களில் பப்பில் எடுத்துக்கொண்ட வீடியோக்களாக தான் இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஆண் நபருடன் ஒட்டி உரசி இரவில் பப் ஒன்றில் நடனமாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மீராமிதுன் இதனை கண்ட நெட்டிசன்கள் மீராமிதுன் கழுவி ஊற்றி வருகின்றனர், ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் மீராமிதுன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார், அந்த வீடியோவில் ஒரு பெண்ணிற்கு எது குட் டச், பேட் டச் என்பது தெரியும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இந்த வீடியோவை காணும் போது இது பேட் டச் என்று தெரியவில்லையா என்று நெட்டிசன்கள் மீரா மிதுனை கழுவி ஊற்றி வருகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் மீராமிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பொது இடத்தில் புகை பிடிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், கடந்த சில நாட்களாகவே வீரர்களுக்கு ஆதரவாக ஒருவர் ட்விட்டரில் அடிக்கடி பதிவுகளை பதிவிடும் வந்தார். ஆனால், அவர் பதிவுகளை பதிவிட அடுத்த கணமே அந்த பதிவுவிற்கு மீராமிதுன் பதிலளித்து வந்தார். ஆனால், பின்னர்தான் தெரிந்தது அவருக்கு ஆதரவாக பதிவிடும் அந்த நபரின் கணக்கையும் மீரா மிதுன் தான் இயக்கி வருகிறார் என்று. இதற்கு முக்கிய காரணமே மீரா மீதுனுக்கு ஆதரவாக பதிவிடும் அந்த கணக்கில் இருந்து ஏதாவது பதிவுகள் போடப்பட்ட அடுத்த கணமே அதற்கு மீராமிதுன் பதில் அளித்து விடுகிறார். இதன் மூலமே அந்த கணக்கையும் மீரா தான் இயக்கி வருகிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இப்படி விளம்பரத்திற்காக மீராமிதுன் செய்து வரும் பல்வேறு பப்ளிசிட்டி ஸ்டன்ட்களை கண்டு ரசிகர்கள் கடும் கடுப்பில் ஆழ்ந்துள்ளனர்
இது ஒருபுறமிருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அதற்கு பின்னர் மீராமிதுன் கமிட்டாகி இருந்த ஒவ்வொரு திரைப்படத்தில் இருந்தும் அடுத்தடுத்து மீராமிதுன் நீக்கப்பட்டு கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனா,ல் பிக்பாஸில் இவர் இருந்த லட்சணத்தை கண்டு இவரது காட்சிகளை படக்குழுவினர் நீக்கிவிட்டனர். இதனால் நம்மை வீட்டுப்பிள்ளை படக்குழுவை கடுமையாக விமர்சித்து மீராமிதுன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதுபோக அருண் விஜய் நடித்துவரும் அக்னி சிறகுகள் படத்திலிருந்தும் மீராவை நீக்கி உள்ளார்கள். இதனால் அந்தப் படக் குழுவினரையும் அந்த படத்தின் இயக்குனரான மூடர்கூடம் நவீனயும் மீராமிதுன் கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை பகிர்ந்திருந்தார். இப்படி 24 மணி நேரமும் குடியும் குடிதானுமாக இருந்தால் இவரை யார் தான் படத்தில் கமிட் செய்வார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.