அந்த காட்சியில் தியேட்டர் தெறிக்கப் போகிறது – சர்ச்சைகளுக்கு மத்தியில் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு தனுஷ் போட்ட பதிவு.

0
1106
- Advertisement -

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் இருந்து மாமன்னன் படத்திற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு தனுஷ் பதிவிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஜூன் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவித்திருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இது தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது. மேலும், விழாவில் மாரி செல்வராஜ், தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன்

ஆடியோ லான்ச் விழா:

கமலஹாசனின் தேவர் மகன் படம் ஜாதி பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது. மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்று கமலஹாசனை மாரி செல்வராஜ் வம்புக்கு இழுத்து இருக்கிறார். இப்படி கமலஹாசனின் தேவர்மகன் படத்தை குறித்து மாரி செல்வராஜ் பேசியது கமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மாரி செல்வராஜூக்கு எதிராக மீம்ஸ்களை தெரிக்க விட்டு வருகிறார்கள்.தேனி மாவட்டத்தில் வெற்றி திரையரங்கத்தில் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தாக்குதல் நடத்துவோம் என்று தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தனுஷ் பதிவு :

இந்நிலையில் இப்படத்தை தனுஷ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாரி செல்வராஜின் மாமன்னன் ஒரு எமோஷன் நிறைந்தது. அவருக்கு ஒரு பெரிய பாராட்டு. வடிவேலு மற்றும் உதயநிதி அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்துள்ளார்கள். இடைவெளி காட்சிக்கு தியேட்டர் தெறிக்கப் போகிறது. இறுதியாக ஏ.ஆர். ரஹ்மான் அழகாக இசையமைத்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி நன்றி :

இதையடுத்து தனுஷ் பாராட்டுக்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி தற்போது தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எல்லாவற்றிற்கும் நன்றி தனுஷ். உங்கள் ஆதரவு இல்லாமல் மாமன்னன் சாத்தியமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். கர்ணன் படம் முடிந்த பிறகு துருவ் விக்ரமை வைத்து ஒரு படமும், மீண்டும் தனுஷை வைத்து ஒரு படமும் இயக்க திட்டமிட்டிருந்தார் மாரி செல்வராஜ். ஆனால் உதயநிதி தன்னுடைய கடைசி படம் என மாரி செல்வராஜை அழைத்ததால் அவரை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement