மீண்டும் இணையும் தனுஷ் – சிவகார்த்திகேயன் கூட்டணி ? உற்சாகத்தில் ரசிகர்கள். லேட்டஸ்ட் அப்டேட் இதோ.

0
2346
Sivakarthikeyan
- Advertisement -

பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ்- சிவகார்த்திகேயன் இணைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் படம் தான் வெளிவந்தது.

- Advertisement -

மாவீரன் படம்:

இந்த படத்தில் மரியா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார்.

படத்தின் ஆடியோ&ட்ரைலர் வெளியீட்டு விழா:

சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கட்டிருந்தது. மேலும், சிவகார்த்திகேயன் பாடிய வண்ணாரப்பேட்டை பாடல் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. கடந்த வாரம் தான் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

தனுஷ்- சிவகார்த்திகேயன் சண்டை:

இந்த நிலையில் மாவீரன் படத்தின் மூலம் மீண்டும் தனுஷ்- சிவகார்த்திகேயன் இணைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, சிவகார்த்திகேயன் அவர்கள் சின்னத்திரையில் சுற்றி கொண்டிருக்கும் போது அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு வாங்கித் தந்த நபர்களில் ஒருவர் தனுஷ். 3 படத்தில் சிவகார்த்திகேயனை தனுஷ் தான் நடிக்க வைத்தார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் திறமையை புரிந்து கொண்டு தனுஷ் அவரை வைத்து படம் எடுத்திருந்தார்.
அதன்பின் தனுஷ்-சிவகார்த்திகேயன் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

மாவீரன் படத்தில் தனுஷ்- சிவகார்த்திகேயன்:

அதற்குப்பின் இவர்கள் இருவரும் படங்களில் இணையவே இல்லை. இந்த நிலையில் மாவீரன் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து இருக்கிறது. மாவீரன் படத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட கடவுளின் ஒரு குரல் கேட்கும் படியான காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முதலில் ரஜினி, கமல் இடம் தான் படக்குழு அணுகி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவருமே படபிடிப்பில் பிஸியாக இருப்பதால் முடியாது என்று நாசுகாக மறுத்துவிட்டார்கள். அதற்குப் பிறகுதான் நடிகர் தனுஷிடம் இது குறித்து கேட்டார்கள். தனுஷும் பழைய பகையை மனதில் வைத்துக் கொள்ளாமல் உடனடியாக மாவீரன் படத்திற்கு குரல் கொடுக்க சம்மதி விட்டாராம். பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ்- சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement