ஷாக்கிங் நியூஸ் : தோனி பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை. அதிர்ச்சியில் திரையுலகம்.

0
1731
- Advertisement -

பாலிவுட் திரையுலகின் ஜாம்பவான்களாக திகழ்ந்து கொண்டிருந்த இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோரின் மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. தற்போது தான் இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் தற்போது இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த சிச்சோர் என்ற படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

-விளம்பரம்-
Dhoni biopic star Sushant Singh Rajput found dead in Mumbai home | India  News | Manorama

இந்த படம் பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றது. இவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுக்கப்பட்ட எம்எஸ் தோனி The Untold Story படத்தில் எம் எஸ் தோனி ஆக நடித்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டது.

- Advertisement -

இப்படி பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை தந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மும்பை பந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின் இவருடைய தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தது.

Actor Sushant Singh Rajput Dead – Actor Sushant Singh Rajput Commits  Suicide, Passes Away at 34! – Wink Report

இதுவரை இவரின் தற்கொலைக்கான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், கபூர் குடும்பத்தை சேர்ந்த ரியா கபூர் என்பவரை காதலித்து வந்ததாக வதந்திகள் வந்தது. சில நாட்களுக்கு முன்பு தான் பாலிவுட் நடிகைகள் இடம் மேனேஜராக பணியாற்றி திஷா சேலியன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement