சாக்க்ஷி திருமணமாகி விவாகரத்து பெற்றவரா? பிக் பாஸ் பிரபலத்தால் எழுந்த சர்ச்சை.!

By Rajkumar · 24/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் வெறுக்கப்பட்டது வனிதா தான். ஆனால், அவருக்கு பின்னர் ரசிகர்கள் அனைவராலும் பலரும் வெறுக்கப்பட்டு வருபவர் சாக்க்ஷி தான். பிக் பாஸ் வீட்டினுள் பல சில்மிஷ வேலைகளை செய்து போட்டியாளர்கள் மத்தியில் பல சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார் சாக்க்ஷி.

வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் சிறுவயது முதலே மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு முதன்முறையாக கன்னடத்தில் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : அடடடா இப்படி ஒரு உடல் அமைப்பா.! மந்த்ராவின் நீச்சல் உடையை கண்டு வியந்த ரசிகர்கள்.! 

ஆனால், இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமானது அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் தான்.அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சாக்ஷி. அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார்.

https://twitter.com/kaajalActress/status/1152817028807315456

மேலும், அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த விசுவாசம் படத்திலும் நயன்தாராவுடன் பணியாற்றும் மருத்துவராக நடித்து இருந்தார். இவ்வளவு தான் சாக்க்ஷியை பற்றி பலரும் அறிந்த விஷயம். ஆனால், இவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டதாக புதிய சர்ச்சை கலம்பியுள்ளது.

https://twitter.com/Artsphotograpy/status/1152819036931031040

சமீபத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான காஜலுக்கு, ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அதில் ' நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் போனீங்கன்னா, ஸ்வீட்  என்று நினைத்துக்கொண்டிருக்கும் சாக்‌ஷி உண்மையில் ஒரு பாம்பு, விஷம் என்று புரியவையுங்கள். அதுதவிர, குறிப்பாக இந்த கேள்வியை கேளுங்க,  சாக்‌ஷி 2011ம் ஆண்டில் திருமணமாகி விவாகரத்தானவர்  என்று  இன்டர்நெட்டில் இருக்கு. அது உண்மையா இருந்தா,  முதல் வாரத்தில் லைஃப் பார்டனர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி வந்தபோது, ஏன் அதப்பத்தி  சொல்லல என்று மறக்காம கேளுங்க ' என்று பதிவிட்டுள்ளார். அதற்க்கு காஜல் மிகவும் ஷாக்காகி 'உண்மையாகவா' என்று கேட்டுள்ளார். காஜல் இந்த டீவீட்டை ரீ-ட்வீட் செய்ததால் தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full