இளம் நடிகையுடன் வெளிநாட்டில் டேட்டிங் சென்ற துருவ் ? வைரலாகும் வீடியோ. அட இந்த நடிகையா.

0
294
dhruv
- Advertisement -

தன்னுடன் நடித்த நடிகையுடன் துருவ் விக்ரம் புத்தாண்டு கொண்டாடிய வீடியோ, புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ் சினிமா திரை உலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் திரை உலகில் தனெக்கென முத்திரையை பதித்தவர் நடிகர் விக்ரம். இவரை சியான் விக்ரம் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். விக்ரம் தனது கடின உழைப்பு மூலம் பல ஆண்டு காலமாக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக திகழ்வது விக்ரம் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் “கோப்ரா” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் விக்ரம் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார். இதனை தொடர்ந்து விக்ரம் அவர்கள் ஆர்எஸ் விமல் இயக்கத்தில் மகாவீர் கர்ணா, மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

வாரிசு நடிகர் துருவ் :

இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாக சினிமா உலகில் தங்களுடைய வாரிசுகளை நடிக்க வைப்பது வழக்கம். அந்த வகையில் விக்ரமின் மகன் துருவ் ஆதித்ய வர்மா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக். மேலும், ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ரதன் என்பவர் இசையமைத்துள்ளார்.

முதல் படத்திலேயே அசத்திய துருவ் :

இந்த படத்தில் பனிதா சந்து, ராஜா, அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் உண்மைக் காதல் உணர்வுகளையும், வலிகளையும் அழகாக எடுத்துச் சொல்கிற கதை. மேலும், இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. அதுமட்டுமில்லாமல் துருவ் இந்த படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் அவருடைய நடிப்பு முதல் படம் மாதிரியே இருக்காது.

-விளம்பரம்-

துருவ்வின் அடுத்தடுத்து படங்கள் :

அந்த அளவிற்கு பிரமாதமாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற திரைப்படத்தில் தனது தந்தை விக்ரமுடன் துருவ் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிக்க உள்ளதாகவும், மாரி செல்வராஜ்- உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் முடிந்த பிறகு தான் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Get A Glimpse Of Dhruv Vikram As Aditya Varma

நடிகையுடன் காதலா :

இது ஒரு பக்கமிருக்க துருவ் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகை பனிதா சந்துடன் எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தால் இவர்கள் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஒரு ஹோட்டல் அறையில் நின்று துபாயின் புர்ஜ் காலிபாவை பனிதா சந்து ரசிக்கும் மாதிரியான புகைப்படம் உள்ளது.

Gallery

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம் :

மேலும், இவர்கள் இருவரும் துபாயில் புத்தாண்டு கொண்டாடியதாகவும், அதற்கான வீடியோ, புகைப்படம் எல்லாத்தையும் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு உள்ளார். தற்போது இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீங்கள் டேட்டிங் செய்து வருகிறீர்களா? என்றும், இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்களா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், இதற்கு துருவ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த ‘சர்தார் உத்தம்’ என்னும் திரைப்படத்தில் பனிட்டா சந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement