பிக் பாஸ்க்கு செல்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் ஜாக்லின் வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்.

By Rajkumar · 1/10/2022

விஜய் டிவியில் ஆண் தொகுப்பாளர்களுக்கு நிகராக பெண் தொகுப்பாளினிகளும் மக்கள் மத்தியில் பிரபலம் தான். டிடி துவங்கி பிரியங்கா வரை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளாக இருந்து வந்த நிலையில் விஜய் டிவி இளம் தொகுப்பாளினியாக களமிறங்கி இளசுகள் மனதில் இடம்பிடித்தவர் ஜாக்லின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள்.

ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : 'என் கணவர் உயிருடன் வந்தால்' - தன் முதல் கணவர் குறித்து பாவனி சொன்ன அதிர்ச்சி பதில் - அப்போ அமீருடன் காதல் என்னாச்சு?

டிவி டூ சினிமா :

அதைன் பின்னர் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் தேன்மொழி சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலும் எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்பதால் இந்த சீரியலை திடீரென்று நிறுத்தினர். அதன் பின்னர் தொகுப்பாளினியாக தொடர்ந்து வந்தார் ஜாக்லின்.

விஜய் டிவி பக்கமே வராத ஜாக்லின் :

ஆனால் சமீப காலமாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லை. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மைனா நந்தினி தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். தற்போது ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை கூட இவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தற்போது இவருக்கு பதிலாக மைனா தான் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸில் ஜாக்லின் :

விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் கூட இவரை காண முடிவதில்லை. அதேபோல இவர் சமீப காலமாக சமூக வலைதளத்தில் கூட எந்த ஒரு புகைப்படங்களையும் பதிவிடாமல் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜாக்லின் பங்குபெறப் போவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வரலாக பரவி வருகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான்.

ஜாக்லின் வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம் :

அதேபோல ஜாக்லினும் சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சிகளும் பங்கு பெறாமல் இருப்பதால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு 'எல்லாம் விரைவில் சரியாகிவிடும்' எனவும் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஜாக்லின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full