கைதி உடையில் லோகேஷ் கனகராஜ் – மாஸ்டர் படத்தில் இவரும் நடித்திருக்காரா. வைரலாகும் புகைப்படம் .

0
1929
lokesh
- Advertisement -

பிகில் படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாநகரம், கைதி போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அதேபோல கைதி படத்தில் தனது குரலால் அசத்திய அர்ஜுன் தாஸ் மற்றும் ஆண்ட்ரியா, மாளவிகா, மோகனன், சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தின் பணிகள் எப்போது முடிந்த நிலையில் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இருப்பினும் இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் நடித்து வரும் தீனா கூட மாஸ்டர் திரைப்படம் 100% திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று சமீபத்தில்தான் ட்வீட் செய்திருந்தார்.

- Advertisement -

இந்தநிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் ஆடை பட ரத்தினகுமார், நடிகர் உதை, Kpy தீனா போன்றவர்களுடன் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் கைதி உடையில் இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அட மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யபட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கேஎஸ் ரவிக்குமார் துவங்கி, ஷங்கர், முருகதாஸ் என்று பல்வேறு இயக்குநர்கள் தங்களது படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜும் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், உண்மையில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது கைது டிரஸ்ஸில் நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்க நானும் கைது டிரஸ்ஸில் சில புகைப்படத்தை எடுத்துக் கொள்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டாராம். ஒருவேளை லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரே சஸ்பென்சாக வைக்கிறாங்க.

-விளம்பரம்-
Advertisement