விலகிய லைகா, வேறு தயாரிப்பாளரை தேடும் இயக்குனர். கைவிடபட்டதா எஸ் கேவின் முக்கிய படம் ?

By Rajkumar · 29/12/2019

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் மிகப் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “நம்ப வீட்டு பிள்ளை” படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை தந்தது. மேலும், இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே பயங்கர வரவேற்பு பெற்று வந்த படம். இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வந்த படம் “ஹீரோ”. இந்த படம் தொடங்கியதிலிருந்தே பிரச்சனைகளில் சிக்கி வந்து கொண்டிருக்கின்றது. பாலிவுட் நடிகர் அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து இன்னும் பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் தான் உள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் "டாக்டர்" என்ற படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்க உள்ளார். ஆனால், இந்த படத்தின் பட்ஜெட் காரணமாக படம் அப்படியே நின்று விட்டது. இந்த படத்திற்கு இசை அமைக்க இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதையும் பாருங்க : சீரியலில் தான் நெருக்கம் எல்லாம். நிஜத்தில் எலியும் பூனையுமாக இருக்கும் கதிர் மற்றும் முல்லை.

இந்த படம் 50 கோடிக்கு மேல் பட்ஜெட் செய்ய உள்ளதாகவும் கூறுகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் இவரின் நடிப்பில் பாதியில் நின்று விட்ட "சயின்ஸ் ஃபிக்சன்" படத்தையும் மீண்டும் துவக்க உள்ளதாகவும், அந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளது என்றும் தெரிய வந்து உள்ளது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போகிறார்கள். மேலும், இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்று கூறப்பட்டது. ஆனால், இந்த படத்தின் பட்ஜெட் அதிகம் எனக் கூறி லைக்கா நிறுவனம் பின் வாங்கி விட்டது. அதனால் வேறு தயாரிப்பாளரை விக்னேஷ் சிவன் தேடி வருகிறாராம். இப்போது சமூக வலைத் தளங்களில் பரவி வரும் நியூஸ் என்னவென்றால், விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க இருக்கும் இந்த பெரிய பட்ஜெட் படத்தை நிறுத்தி விட்டார் என்றும், அதற்கு பதிலாக ஒரு சின்ன பட்ஜெட் கதையை எழுதி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நடிகர் சிவகார்த்திகேயனும், இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்னால் மட்டும் தான் தெரியும். இந்த படம் இல்லை என்றாலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படமும், சயின்ஸ் பிக்சன் படமும் அடுத்த வருடம் வெளியாகும் என்பது உறுதி என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். இந்த படத்தின் பூஜைகள் முடிந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரியங்கா மோகன், யோகி பாபு, இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆனால், டாக்டர் என்ற படத்தின் தலைப்பில் முதலில் தனுஷ் அவர்கள் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை கே.ஜி.ஆர்.பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. ரெமோ படத்தை தொடர்ந்து இந்த டாக்டர் படத்திற்கும் அனிருத் அவர்கள் இசை அமைக்கிறார். படத்தின் மோஷன், போஸ்டர் எல்லாம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full