சீரியலில் தான் நெருக்கம் எல்லாம். நிஜத்தில் எலியும் பூனையுமாக இருக்கும் கதிர் மற்றும் முல்லை.

0
9672
kathir
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், ஹேமா விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம். மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். சித்ரா– குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். அந்த நிகழ்ச்சியில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ என்ற பாட்டுக்கு இவர்கள் ஆடிய நடனம் அட்ராசிட்டி ஆக இருந்தது. அந்த அளவிற்குப் சூப்பராக பட்டைய கிளப்புனாங்க. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள்.

இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள். உண்மையாலுமே இவர்கள் இருவரும் மோதலில் தான் உள்ளார்கள் என்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த சூட்டிங்கில் கலந்து கொண்ட சில பேர் இவர்கள் சண்டை குறித்து கூறியது, இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் என்ன தான் பிரச்சனை என்று ஒண்ணுமே புரியவில்லை.

-விளம்பரம்-
Image result for kumaran chithra

சீரியல் தொடங்கிய காலத்தில் இருவரும் நல்ல நண்பர்களாகத் தான் பேசிக் கொண்டு வந்தார்கள். சீரியல் மூலம் இவர்கள் இருவருக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. ஜோடி நடன நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவர்கள் இருவருக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டது. பின் இவர்கள் இடைவெளி நாளுக்கு நாள் பெரிய அளவில் போய்க் கொண்டு தான் உள்ளது. சூட்டிங் நேரத்தில் மட்டும் தான் இவர்கள் இருவரும் பேசுவார்கள். பின் சூட்டிங் பிறகு ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு போராடியது. ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

Related image
தனது மனைவி சுஹாஷினியிடன் குமரன்

அதோட பாண்டியன் ஸ்டோர்ஸ் பொண்டாட்டி நிகழ்ச்சிக்காக ஸ்டேஜில் இவர்கள் இருவரும் பர்ஃபாமென்ஸ் பண்ணுங்க. அது சீரியலுக்கு விளம்பரமாகும் என்று கேட்டுப் பார்த்தார்கள். அப்பவும் சித்ரா தயார் என்று சொன்னார். ஆனால், குமரன் தான் சம்மதிக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் சேனலே கடுப்பாகி விட்டார்கள். இந்த கொண்டாட்டம் நிகழ்ச்சியை விட இவர்களுடைய பஞ்சத்தை தீர்க்க தான் சேனல் தீவிரமாக முயற்சி செய்து கொண்டு வந்தார்கள் என்று சொல்லலாம். வேணும்னு என்றே குமரன் அவர் மனைவியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார். இந்த செயல்களால் சித்ரா மிகவும் அப்செட் ஆக இருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸில் இவர்கள் இருவரும் எது வரை இருப்பார்கள் என்று ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள்.

Advertisement