சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய மாமன்னன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த பின்னர் நெட்டிசன்கள் சிலர் வடிவேலு மற்றும் உதயநிதியை பாராட்டுவதை விட இந்த இடத்தில் ஜாதி வெறி பிடித்த ஒரு கதாபாத்திரமாக நடித்த பஹத் பாசிலின் கதாபாத்திரத்தை ஒரு ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள்.

அதிலும் பஹத்தின் சீன்களை எல்லாம் கட் செய்து அதற்கு எண்ணற்ற ஜாதி பாடல்களை போட்டு சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதே போல இந்த படத்தில் வில்லனாக நடித்த பஹத் பாஸிலின் காட்சிகளை வீடியோவாக தொகுத்து, தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு போடப்பட்ட பாட்டை போட்டு பஹத் பாஸிலை ஹீரோவாக மாற்றிவிட்டனர். இது தொடர்பான பல்வேறு விதமான மீம்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

ராஜராஜ சோழனுக்கு பின்னர் மாமன்னன் ரத்தினவேல் தான் அனைத்து ஜாதியினறாலும் உரிமை கொண்டாடப்படும் ஒரு நபராக இருந்து வருகிறார் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மோகன் ஜியிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ‘பகத் பாசில் வச்சு வட தமிழகத்தின் அதிரடியான வாழ்வியல் படைப்புகளை எடுத்து விட்டா இன்னொரு 20 வருஷத்துக்கு நின்னு பேசும் ணே’ என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை கண்ட மோகன் சிரித்தபடி இருக்கும் சில எமோஜிக்களை கமண்ட் செய்து இருக்கிறார். அதே போல மாமன்னன் ட்ரோல்கள் குறித்து சூசகமாக பதிவிட்டுள்ள மோகன் ‘என்னங்கடா இப்படி அநியாயம் பண்ணுறீங்க, போதும் நிறுத்துங்க’ என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மோகன் ஜி செல்வராகவன்,கெளதம் மேனன் போன்ற மிகப்பெரிய இயக்குனர்களயே தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இது ஒருபுறம் இருக்க மாமன்னன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் போது இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம். தேவர் மகனில் இருக்கும் இசக்கி தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்றும் கூறி இருந்தார். இதனால் கமலஹாசனின் தேவர்மகன் படத்தை மாரி செல்வராஜ் பேசியது குறித்து கமல் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

அதே போல மாரி செல்வராஜின் இந்த பேச்சை தொடர்ந்து தேவர் மகன் படம் குறித்தும் அந்த படம் ஜாதிப்படமாக என்பது குறித்தும் விவாதங்கள் சமூக வலைதளத்தில் எழ துவங்கிவிட்டது. இப்படி ஒரு நிலையில் தேவர் மகன் படம் குறித்து மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று.. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே.

இந்த திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம்’ என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் மாமன்னன் படம் குறித்து ட்ரோல்கள் குறித்து மோகன் ஜி தொடர்ந்து மூக்கை நுழைத்து வருகிறார். இதுஒருபுரம் இருக்க ‘பகாசுரன்’ படத்தை தொடர்ந்து மோகன் ஜி மீண்டும் ரிசார்டை வைத்து படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement