Ak62 பட வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைக்காததற்கு காரணம் நயன்தாராவா ?

0
511
- Advertisement -

கோலிவுட் ஸ்டாரான பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். மேலும் ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார். இப்படம் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதோடு படம் வணிக ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர்.

-விளம்பரம்-

அஜித்தின் AK 62 :

இந்த நிலையில் தான் அஜித் அடுத்ததாக AK 62 படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருபதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தை லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதுவும் படத்தில் நடிக்கும் நடிகர்களை தேடும் பணியில் படக்குழு இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

AK 62 நடிகர்கள் :

இதனையடுத்து அஜித் நடிக்கும் AK 62 படத்தில் வீரம், கீரிடம், பில்லா படங்களுக்கு பிறகு சந்தானம் நடிக்க இருகிறார் என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் பரவலாக பேச தொடங்கியுள்ளன. மேலும் இப்படத்தில் சந்தானம் காமெடியனாக மட்டும் நடிக்காமல் வேறு ஒரு கதாபாத்திரமாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜ் நடிக்க இருப்பதாகவும், வில்லனாக அரவிந்த சாமி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

விக்னேஷ் சிவம் விலகல் :

இப்படி AK62 படத்தை பற்றி பல தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில் இப்படத்தின் கதை அஜித்திற்கும், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவம் AK62வில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. மேலும் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு புதிய தகவல் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. AK62வில் இருந்து விக்னேஷ் சிவம் நீக்கப்பட்டதற்காக காரணம் நயன்தாரா என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மற்ற கதாநாயகிகளை மறுத்த விக்னேஷ் :

அதாவது AK62 படத்தின் இயக்குனராக இருந்த விக்னேஷ் சிவம் படத்தின் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் நயன்தாராவிற்கு பதிலாக நடிகை திரிஷாவை லைகா நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் அதனை விக்னேஷ் சிவம் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து இசசரியா ராய், காஜல் அகர்வால் என தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளை பரிந்துரை செய்தும் இயக்குனர் விக்னேஷ் சிவம் தன்னுடைய மனைவி நயன்தாராவை கதாநாயகியாக அடம்பிடித்திருக்கிறார்.

விக்னேஷ் சிவம் விலக காரணம் :

இந்நிலையில் இறுதியாக பிரபல பாலிவுட் நடிகையை தேர்ந்தெடுத்து சம்பளம் விவகாரம் வரையில் சென்ற பிறகு விக்னேஷ் சிவம் அந்த நடிகையும் வேண்டாம் என்று சொல்ல AK62 தயாரிப்பு நிறுவனம் மற்றும் அஜித் கடுப்பாகி விக்னேஷ் சிவமை படத்தில் இருந்து நீக்கியதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்த தகவல் வைரலாக நிலையில் ஏற்கனனே விக்னேஷ் சிவமை கலாய்த்த நெட்டிசன்கள் தற்போது பலவிதமான மீம்ஸுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Advertisement