ரகசிய திருமணத்தை முடித்த நயன் ? பாலிவுட் நடிகைகளை போல குழந்தை விஷயத்தில் ஷாக்கிங் முடிவை எடுத்துள்ள நயன் ?

0
546
nayan
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாராவிடம், அவர் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா, இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார். தாங்கள் மிகவும் privateஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை. ஆனால், நிச்சம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்.

- Advertisement -

ரகசிய திருமணம் முடிந்ததா ?

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகை நயன்தாரா. அதில் ஒரு புகைப்படத்தில் நடிகை நயன்தாராவின் நெற்றி வகிடில் குங்குமம் இருந்தது தான் தற்போது நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்கிற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஏற்கனவே ரகசிய திருமணத்தை முடித்துவிட்டதாக ஒரு புதிய கிசுகிசு கிளம்பி இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is 2-15.jpg

வாடகை தாய் மூலம் குழந்தையா ?

இப்படி ஒரு நிலையில் 37 வயதாகும் நயன்தாரா ‘Surrogacy’ முறையயில் அதாவது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறறது. பொதுவாக ‘Surrogacy’ 40 வயதை கடந்தவர்களும், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத அல்லாத குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாதா நபர்களே இந்த ‘Surrogacy’ முறைப்படி குழந்தையை பெற்றுக்கொள்வார்கள்.

-விளம்பரம்-

‘Surrogacy’ முறையில் குழந்தை பெற்ற நடிகைகள் :

பொதுவாக இந்த ‘Surrogacy’ பாலிவுட் துறையில் தான் மிகவும் அதிகம். பாலிவுட்டில் ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி சிந்தா போன்றவர்கள் இந்த ‘Surrogacy’ முறைப்படி தான் குழந்தை பெற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருமே 40 வயதை கடந்த பின்னரே இந்த முடிவை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல சமீபத்தில் கூட பிரியங்கா சோப்ரா கூட ‘Surrogacy’ முறைப்படி குழந்தைக்கு தாயானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயனின் 100 பட டார்கெட் ?

ஆனால், 37 வயதாகும் நயன்தாராவின் இந்த முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதே பலரின் கேள்வி. ஏற்கனவே நடிகை நயன்தாரா 100 படங்களில் நடித்த பின்னர் தான் தனது திருமணத்தை செய்துகொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது நயன்தாரா 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இன்னும் 3 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்தால் கூட 40 வயதை அவர் நிச்சயம் நெருங்கிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement