காதலரை பிரிந்துவிட்டாரா பிரியா பவானி ஷங்கர் ? – அவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவ பாருங்க.

0
673
priya
- Advertisement -

சமீபத்தில் பிரியா பவானி ஷங்கர் பதிவிட்ட இன்ஸ்டா பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பிரேக் அப் ஆகிவிட்டதா என்று குழம்பி போயுள்ளனர். தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என்னுடைய உலகத்தில் என்றும் நீ ஒரு சூரிய ஒளியாக இருப்பாய் என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானி சங்கர் இதுகுறித்து தெரிவிக்கையில், என்னுடைய கல்லூரியில் ஆரம்பித்து இப்போது வரை நான் சொல்லுகிறேன் என்னிடம் அளவுக்கு மீறிய அன்பை ஒரு நபர் காண்பிக்கிறார் என்றால் அது அவர்தான்.

- Advertisement -

என்னுடைய தந்தைக்கு நிகராக என்னை பார்த்துக் கொள்ள முடியும், உன்னுடன் இருக்க முடியும் என்றாள் அது அவர்தான் என்று கூறி இருந்தார். அதே போல கடந்த ஜனவரி மாதம் பிறந்தநாளை கொண்டாடிய தன் காதலனுக்கு வாழ்த்து தெரிவித்த பிரியா பவானி ஷங்கர், தனது காதலருடன் 10 வருடத்திற்கு முன்னர் எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து, இந்த 10 ஆண்டுகளில் வாழ்க்கை மாறிவிட்டது.

Priya Bhavani Shankar's Advice On Love To Her Fan Will Crack You Up; READ  ON! | JFW Just for women

ஆனால், நம் இருவருக்கும் உள்ள பிணைப்பு மாறவில்லை என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம் ஒன்றை ஷேர் செய்து இருந்தார். அதில் ‘யாரவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால் என் ரியாக்ஷன் இதான் என்று குறிப்பிடபட்டுள்ளது. இதை [பார்த்த ரசிகர்கள் பலரும் பிரியா பவானி ஷங்கரின் காதல் முறிந்துவிட்டதா என்று சந்தேகம் அடைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement