ரஜினி முகம் பதித்த நாணயம் வெளியிடப்பட்டதா ? – ரஜினி ரசிகர்கள் பகிரும் Coinனின் புகைப்படம். உண்மை என்ன ?

0
2623
- Advertisement -

ரஜினி முகம் பதித்த நாணயம் குறித்த பின்ணணி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

ரஜினி திரைப்பயணம்:

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

ரஜினி நடிக்கும் படங்கள்:

இந்த படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னொரு படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்புகள் எல்லாம் அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து ரஜினியின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்று தகவல் வெளியானது.

ரஜினி முகம் பொறித்த நாணயம்:

மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் ரஜினியின் உருவம் பொறித்த நாணயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ரஜினியின் உருவம் பொறித்த நாணய புகைப்படத்தை பதிவிட்டு, நீங்கள் எல்லாம் ஆசைப்படும் உயரத்தை அவர் எப்பவோ எட்டி விட்டார். நீங்கள் எல்லாம் அடையப் போகும் இலக்கை அவர் எப்போதோ தொட்டுவிட்டார். நீங்கள் எல்லாம் செய்யப்போகும் சாதனைகளை அவர் எப்போதோ செய்துவிட்டார்.

நாணயம் புகைப்படம் பின்னணி:

அதற்கு சின்ன உதாரணம் தான் 2017ல் வெளிவந்த இந்த நாணயத்தில் தலைவர் என்று ரஜினிகாந்தின் முகம் பொறிக்கப்பட்ட நாணயத்தின் புகைப்படம் பதிவிடப்பட்டிருக்கிறது. இது உண்மையா என்று பலரும் கேட்டு வந்தார்கள். ஆனால், இந்த தகவல் உண்மை இல்லை. இது ரஜினியின் ரசிகர்கள் செய்த வேலை. இதைத்தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement