நடிகர் ரஜினிகாந்த் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உடல் நலம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். மேலும், சினிமா திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகளும், படைப்புகளும் எண்ணிலடங்காதவை.அதே போல கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜீராவ் காயகவாட் இன்று இந்தியாவை திரும்பி பார்க்கவைக்கும் ஒரு மாபெரும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.

ரஜினி கொரோனா ஊசி செலுத்திக்கொண்ட போது

தற்போது 70 வயது ஆகும் ரஜினிக்கு கடந்த சில காலமாக உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் போய்விடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினிக்கு திடீர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதேபோல ரஜினிக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூட நடந்து இருக்கிறது.

இதையும் பாருங்க : அண்ணாத்த படத்தில் தன்னுடைய ரோல் குறித்து தற்போது வருத்தப்பட்ட குஷ்பூ – வைரலாகும் அவரின் பதிவு, ஏன் பாருங்க ?

Advertisement

இதனாலேயே ரஜினி அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் ரஜினி நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவரது மனைவி லதா,அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாள் தங்கியிருந்து பரிசோதனையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார்.

அண்ணாத்த படத்தை தன் பேரன்களுடன் பார்த்த ரஜினி

இந்த நிலையில் நடிகர் ரஜினிக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement