உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Advertisement

ஜெயிலர் படம்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது நெல்சன் அவர்கள் ஜெயிலர் பட வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் திடீரென டெல்லி சென்றிருந்தார்.

டெல்லி சென்ற ரஜினி:

ஜெயிலர் படம் தொடர்பாக தான் அவர் டெல்லி சென்றதாக கூறப்பட்டு இருந்தது. அதன் பின்னரே 75வது சுதந்திர தின விழா தொடர்பாக தான் ரஜினி டெல்லி சென்றது தெரிய வந்தது. பின்னர் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் குறித்து டெல்லியில் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறை பிரபலங்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அவர்கள் கிண்டி ராஜ்பவனில் இருந்த கவர்னர் ஆர்.என் ரவியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

Advertisement

ரஜினி-கவர்னர் சந்திப்பு:

இவர்கள் இருவரும் 30 நிமிடம் பேசியிருக்கிறார்கள். இவர்களின் சந்திப்பு அரசியல் குறித்த விவாதமாக இருக்குமா? என்று பலரும் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தார்கள். பின் தன்னுடைய வீட்டிற்கு வெளியே பத்திரிகையாளர் சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் கூறியிருந்தது, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. நாங்கள் அரசியல் பற்றிப் பேசியது உண்மைதான். ஆனால், அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது. நான் மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன்.

Advertisement

ரஜினியை விமர்சித்த நெட்டிசன்கள்:

மக்கள் பிரச்சனை குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று ரஜினிகாந்த் கூடியிருந்தார். இப்படி இவர் பேசி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் விமர்சித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். அதிலும் சிலர், சமீபத்தில் தமிழ் சினிமாவின் பைனான்சியர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. மேலும், அங்கு பறிமுதல் செய்யப்பட்ட சில கோடிக்கணக்கான பணங்கள் ரஜினிக்கு சொந்தமானது என்றும் அந்த பணத்தை காப்பற்ற தான் ரஜினிகாந்த் டெல்லி, கவர்னரை சந்தித்து இருப்பாரோ என்றெல்லாம் விமர்சித்து கிண்டல் செய்து வருகிறார்கள். இதுகுறித்த meme ஒன்றை ப்ளூ சட்டையும் பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement