தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பின் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டது குறித்து சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். மேலும், இதுகுறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது.

பிறகு சமந்தா கணவரை பிரிந்த பின் பல திரை படங்களில் ஒப்பந்தமாகி கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமந்தா அவர்கள் ஆங்கில படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பிலிப் ஜான் இயக்குகிறார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ‘திமேரி என்.முராரி எழுதிய ‘அரேன்ஜ்மென்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது. மேலும், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்.

இதையும் பாருங்க : மீனா, தனத்தை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் ரோலில் முல்லை – வெளியான புகைப்படம் இதோ.

Advertisement

இந்த நாவலில் வரும் ஒரு இளம் பெண் இருபால் உறவு கொள்பவராக இருப்பார். அந்த கதாபாத்திரத்தில் தான் சமந்தா நடிக்கிறார். இவரின் கதாபாத்திரம் குறித்து சோசியல் மீடியாவில் பல கருத்துக்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் சமந்தா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிலிப் ஜான் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படத்தை குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியது, நான் கடைசியாக 2009 இல் ‘இ மாய சேஷவ்’ படத்தின் ஆடிசனில் கலந்து கொண்ட போது பயங்கர பதட்டத்தில் இருந்தேன்.

பின் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பதட்டத்தை இந்த ஆடிசனின் போது அனுபவித்தேன். அதோடு BAFTA விருது பெற்றுள்ள பிலிம் ஜான் வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர்களை இயக்கியவர். அதுமட்டுமில்லாமல் உலக அளவில் பிரபலமான Downton Abbey தொலைக்காட்சித் தொடரை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்காக இயக்குனருக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

Advertisement
Advertisement