மீனா, தனத்தை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் ரோலில் முல்லை – வெளியான புகைப்படம் இதோ.

0
1027
mullai
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் கதாநாயகனின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை காவ்யா. இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிகை காவ்யா இந்த சீரியல் மூலம் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இவருக்கு தளபதி நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்துள்ளது.

இதையும் பாருங்க : ஜெய் பீம் செங்கேணியின் எமோஷனல் வசனத்தை பேசி அசத்திய ராசாகண்ணு மகள் – வைரலாகும் வீடியோ

- Advertisement -

ஆனால், பிகில் படத்தின் வாய்ப்பை தவறவிட்டு விட்டோம் என்று பின்னர் வருத்தப்பட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார் காவ்யா அறிவுமணி. அதே போல தற்போது இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. சக்திவேல் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க பரத் மற்றும் வாணி போஜன் கமிட்டாகி இருந்தார்கள். அப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது.

This image has an empty alt attribute; its file name is 1-73-582x1024.jpg

இந்த புதிய படத்தில் தான் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் காவ்யா. இப்படி ஒரு நிலையில் இப்போது கூட Tom & Jerry என்ற பெயரில் ஒரு வெப் சீரியஸ் நடித்துள்ளார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ளார் என தெரிகிறது. அந்த வெப் சீரியஸ் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement