பிக் பாஸில் கமலை தரைகுறைவாக பேசினாரா சரவணன்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

0
25858
saravanan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சரவணன் கல்லூரி காலத்தில் படிக்கும்போது பெண்களை பேருந்தில் உரசியுள்ளேன் என்று கூறி இருந்து கருத்து பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னர் பிக் பாஸ். நீங்கள் பெண்கள் குறித்து பேசிய விடயம் மிகவும் கண்டிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் சரவணன் மன்னிப்பும் கோரி இருந்தார். இருப்பினும் இத்தனை நாட்கள் கழித்து அவரை வெளியேற்ற என்ன காரணம் என்று பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : சிங்கப்பூரில் வெளியான நேர்கொண்ட பார்வை.! முதல் பாதி விமர்சனம் இதோ.! அஜித் பேர் என்ன தெரியுமா? 

- Advertisement -

இந்த நிலையில் சரவணன் கமலை தரக்குறைவாக பேசியதால் தான் வெளியேற்றபட்டார் என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கமல், லாஸ்லியாவிடம் கேள்வி கேட்டிருந்தார். அப்போது ஒரு குரல் ‘கோர்த்து விடுறான்’ என்று கூறியது தெளிவாக கேட்கிறது.

அந்த குரல் சரவணனுடையது தான் என்றும் கமலை இப்படி தர குறைவாக பேசியதால் தான் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எந்த ஒரு முன்னெச்சரிக்கையின்றி வெளியேற்றபட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது தான் சரவணன் வெளியேறியதற்கு உண்மையான காரணமா என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-


Advertisement