சினிமாவிற்கு நுழையும் போதே ஷங்கர் போட்ட கண்டிஷன் – மகளுக்கு கடிவலம் போட முடிவெடுத்துள்ள ஷங்கர்.

0
1582
- Advertisement -

தனது மகளின் சினிமா கேரியர் விஷயத்தில் ஷங்கர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

-விளம்பரம்-

தற்போது இவர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். மேலும், இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் நடிகையாக களம் இறங்கி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தியின் விருமன் மூலம் தான் சங்கர் மகள் அதிதி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கார்த்தி ஹீரோவாக நடித்து இருந்த இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தார்.

- Advertisement -

இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தின் மூலம் அதிதிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. ஆனால், அதிதி பேட்டிகளில் கடி ஜோக் என்று சொல்லி செய்த கூத்தை எல்லாம் பார்த்து இவருக்கு கிரிஞ் பட்டமும் சேர்ந்தது. எது எப்படியோ விருமன் படத்திற்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார் அதிதி. அதிலும் இரண்டாம் படத்திலேயே சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்தார் அதிதி.

Aditi

இதனை தொடர்ந்து விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அடுத்த படத்திலும் கமிட் ஆகி இருகிறார். அதே போல ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதிதி கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இப்படி அதிதி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் வேளையில் விரைவில் அதிதிக்கு திருமணம் செய்து வைக்க ஷங்கர் முடிவெடுத்து இருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

விருமன் படத்தில் அதிதி கமிட் ஆனா போதே தனது மகளுக்கு ஷங்கர் கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார். அது என்னவெனில் அதிதி ஷங்கருக்கு ஒரு வருடம் டைம் கொடுத்துள்ள ஷங்கர் அதற்குள் உனக்காக வாய்ப்பை தேடிக்கொள் என்று தன் மகளிடம் கூறி இருக்கிறாராம். ஆனால், ஒருவருடத்திற்கு உள்ளாகவே அதிதிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் அதிதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த காரணத்தினால் இரண்டு மூன்று படங்கள் நடித்த பிறகு அதிதி ஷங்கரை சினிமாவிலிருந்து நிறுத்தி விடலாம் என்று டைரக்டர் ஷங்கர் நினைத்திருந்தார்.

ஆனால், அதிதி நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால் இன்னும் இரண்டு வருடங்கள் மட்டும் நடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குள் மாப்பிள்ளை பார்த்து மணமுடிக்க வீட்டில் திட்டம் போட்டுவிட்டார்கள். ஓகே சொல்லிவிட்டு அமைதியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அதிதி. ஆனால், திருமணத்திற்கு பின் அதிதி நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement