ஆமா, யார் இந்த பொண்ணு ? மீண்டும் சித்து விளையாட்ட ஆரம்பித்து விட்டாரா சிம்பு?

By Rajkumar · 26/1/2020

நடிகர் சிம்பு அவர்கள் 20 ஆண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கு என்றும் சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குபஞ்சம் கிடையாது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் நடிப்பதாக இருந்தது. பின் பல்வேறு காரணங்களால் சிம்பு மாநாடு படத்தில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து இந்த படத்திற்கு கூடிய விரைவில் நடிகரை தேர்ந்தெடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் தயாரிப்பாளர்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் நடிப்பில் 'மகா மாநாடு' என்ற படத்தை தந்தை டி. ராஜேந்திரன் அவர்கள் இயக்க போகிறோம் என்று அதிரடி அறிவிப்புகளை தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்தை ஐந்து மொழிகளில் உருவாக்க போகிறார் என்றும், இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இப்படி இவர்கள் இருவரும் மாத்தி மாத்தி வாக்குவாதம் செய்து கொண்டு வந்தார்கள். பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. நடிகர் சிம்பு மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது.

இதையும் பாருங்க : மாஸ்டருடன் மோத உள்ள ஒரு டாப் ஹீரோவின் படம் மற்றும் ஒரு இயக்குனரின் படம்.

இந்த படம் ஒரு அரசியல் கதையை மையமாக வைத்தும், திரில்லர் காட்சிகளை கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிய வந்தன. அதுமட்டும் இல்லாமல் நடிகர் சிம்பு அவர்கள் மாநாடு படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு கூடிய விரைவில் தொடங்க உள்ளதாகவும் அறிவித்து உள்ளார். மேலும், நடிகர் சிம்பு அவர்கள் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை குறைத்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளம் ஒன்றில் நடிகர் சிம்புவுடன் ஒரு இளம்பெண் சிரித்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சிம்புவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு வதந்திகளை சோசியல் மீடியாவில் கிளப்பி வருகின்றனர். ஒரு வேலை இந்த பெண் மாநாடு படத்தில் நடிப்பவரோ? சிம்புவின் காதலியோ? என்று பல விமர்சனங்களை எழுப்பிக்கின்றனர். இதற்கு எல்லாம் நடிகர் சிம்பு அவர்கள் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. சிம்புவின் பதிலுக்காக ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full