மாஸ்டருடன் மோத உள்ள ஒரு டாப் ஹீரோவின் படம் மற்றும் ஒரு இயக்குனரின் படம்.

0
18139
master
- Advertisement -

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பல்வேறு முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது ரஜினி கமல் விஜய் அஜீத் சூர்யா என்று பல்வேறு நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருப்பதால் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைய இருக்கிறது. அந்த வகையில் விஜய் பிகில் படத்தினை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.

-விளம்பரம்-

மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கும் மூன்றாவது படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார், மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா விவேக் என்று பல்வேறு நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த படத்தினை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : முழுசாக மாடர்ன் அவதாரத்திற்கு மாறி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். ஸ்லீவ் லெஸ் ஆடைகளில் நடத்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

கோடை விடுமுறையை டார்கெட் செய்து இந்த படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால், கோடை விடுமுறையை குறி வைத்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களும் வரிசையில் நின்று கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சூர்யா நடித்துவரும் சூரரைப்போற்று படமும் கோடை விடுமுறைக்கு வெளியாக தயாராக இருக்கிறது. இந்த படம் ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் ,அப்போது இந்த படத்தின் பணிகள் நிறைவடையாத காரணத்தால் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை.இதனால் இந்த படம் மாஸ்டர் படத்துடன் போட்டி போட இருக்கிறது என்று பொருள்படுகிறது.

Image result for soorarai pottru

-விளம்பரம்-

இது ஒருபுறமிருக்க மாஸ்டர் மற்றும் சூரரை போற்று படத்திற்கு போட்டியாக சசிகுமார் படமும் களமிறங்குகிறது. கடந்த சில காலமாக நடிகர் சசிகுமார் வெற்றிப்படத்தை கொடுக்க போராடி வருகிறார்.தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நானா, பரமகுரு போன்ற பல்வேறு படங்களில் நடித்து வரும் சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் திரைப்படமும் தயாராகி வருகிறது. இந்த படத்தைதான் மாஸ்டர் படத்திற்கு போட்டியாக வெளியிட இருக்கிறாராம் சசிகுமார். எனவே, மாஸ்டர் திரைப்படத்துடன் இரண்டு படங்கள் மோதல் இருக்கிறது.

Advertisement