இது என்ன அப்படியே இருக்கு - பொல்லாதவன் படம் காப்பியா? வெற்றிமாறனை கேலிக்கு உள்ளாக்கிய வீடியோ.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் எல்லாம் வேற லெவல். தனுஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து இவர் தான் என்று சொல்லலாம். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். பின் வெற்றி மாறன் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
https://twitter.com/Sivaji_37/status/1426209785163042818
அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.இந்த படத்திலேயே வெற்றி மாறனுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.
இதையும் பாருங்க : அன்று விவேக் அனுப்பிய மெசேஜுக்கு ரிப்ளை கூட செய்யாமல் - இன்று அவருடன் நடித்த நிகழ்ச்சி குறித்து வருந்திய புகழ்.
இறுதியாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது. 2007 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படம் 'பை சைக்கிள் தீவ்ஸ்' என்ற இத்தாலிய திரைப்படத்தின் தழுவல் என்று தான் கூறப்பட்டு வருகிறது. மேலும், பொல்லாதவன் படத்தில் பல்சர் பைக்கை வைத்து தான் படமே நகரும். இந்த படத்திற்கு பின்னர் தான் பல்சர் பைக்கை பலரும் வாங்க ஆரம்பித்தனர்.
https://twitter.com/vaangasirikalam/status/1426382103617232901
இப்படி ஒரு நிலையில் பைசைக்கிள் தீவ் படத்தின் காட்சியையும் பொல்லாதவன் பட காட்சியையு ஒப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டு ட்விட்டரில் ஒருவர், பிளாக் & ஒயிட் படத்துல இருந்துலாம் தோண்டி எடுக்குறானுக என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு மற்றொரு ட்விட்டர் வாசி ஒருவர், அடேய் வெற்றிமாறா உன்ன உத்தமன்னு நெனச்சுட்டு இருந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
https://www.youtube.com/watch?v=X4aCyZrVp_c&t=2s
இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து வெற்றிமாறன் அளித்த விளக்கம் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பேசியுள்ள அவர், என்னுடைய நண்பர் ஆன்டுரியூ என்பருடன் தான் நான் ஒன்றாக வேலை செய்தேன். அவர் வைத்திருந்த பைக் ஒன்று தொலைந்துவிட்டது. அவர் தொலைந்து போன பைக்கை தேடி சென்ற கதையை எண்ணிடம் சொல்லுவார். அதை தான் நான் படமாக எடுத்தேன். பொல்லாதவன் படத்தை பைக் சைக்கிள் தீவ் படத்துடன் ஒப்பிடுவது அந்த படத்திற்கு ஏற்படும் களங்கம் என்று கூறியுள்ளார்.