தமிழக மக்களால் இருந்த சின்னக் கலைவானர் என்று போற்றப்பட்ட நடிகர் விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
இதையும் பாருங்க : எப்போ சார் படத்துல நடிக்க போறீங்க – ரசிகரின் கேள்விக்கு ரஹ்மானின் பதில் (சரியான ஊம குசும்புபா இவரு )
இப்படி ஒரு நிலையில் ‘எங்க சிரி பாப்போம்’ நிகழ்ச்சி வீடியோவை பகிர்ந்து உருக்கம் தெரிவித்துள்ளார் குக்கு வித் கோமாளி புகழ். அதில், உங்க கூட வேலை செஞ்சதையும், உங்களோட இருந்த நாட்களையும் எல்லார்கிட்டயும் சந்தோஷமா பகிர்ந்துக்க காத்துட்டு இருந்தேன்.. ஆனா இவ்ளோ மன வேதனையோட இந்த பயணத்தை பகிர வச்சிட்டீங்க அய்யா. நா உங்கள ஒவ்வொரு முறை பாக்கும்போதும் வியப்பா தான் பாத்தேன். இந்த பயணம் என் வாழ்க்கைல ஒரு மறக்க முடியாத அனுபவம்.
உங்க முன்னாடி நா perform பண்ணிருக்கேன் .. அத பாத்து நீங்க சிரிச்சீங்கங்ன்னு யோசிக்கும்போது, நா நிச்சயமா பாக்கியம் பண்ணவன். என்னிக்கும் உங்க ஆசிர்வாதத்தோட , புகழ். என்று பதிவிட்டுள்ளார். விவேக் இறந்த போது புகழுக்கு நடிகர் விவேக் அனுப்பிய இன்ஸ்டாகிராம் மெசேஜ்ஜின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதில், புகழுக்கு நடிகர் விவேக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ‘ஹேலோ புகழ், எப்படி இருக்கீங்க’ என்று மெசேஜ் செய்து இருந்தார்.
ஆனால், அதற்கு புகழ் எந்த ஓர் பதிலும் கொடுக்காமல் இருந்துள்ளார். அதே போல கடந்த மார்ச் 8 ஆம் தேதியும் ஹேலோ புகழ் என்று மெசேஜ் செய்துள்ளார் விவேக், அதற்கும் புகழ் பதில் அளிக்கவில்லை.விவேக் இறந்த பின்னர் தான் விவேக் அனுப்பிய மெசேஜுக்கு அய்யா மன்னிச்சிடுங்க என்று உருக்கத்துடன் பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.