ரஜினியின் அந்த படத்தின் தோல்விக்கு பார்ட்டி வைத்ததார் அந்த நடிகர் – பிரபலத்தின் பேச்சால் அடிபட்ட விஜய் அஜித் பெயர்.

0
1143
rajini
- Advertisement -

80s 90s களில் தொடக்கி இன்று வரை ரசிகர்களின் மத்தியில் சூப்பர்ஸ்டார் என்ற அங்கிகாரத்தை பெற்று வைத்திருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த. தன்னுடைய வாழ்க்கையை பஸ் கண்டக்டரிலிருந்து என்ற சிறு புள்ளியுள் தொடங்கி இன்று உலகமக்கள் அனைவரும் அன்னார்ந்து பார்க்கும் அளவிற்கு கோட்டிகளை சம்பளம் பெற்று இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பல சூப்பர்ஹிட் அடைத்த படங்களை கொடுத்த ரஜினிகாந்திற்கு சினிமாவில் பெரிய இடைவேலைக்கு பிறகு வெற்றியை கொடுத்த படம் என்றால் அது “படையப்பா” திரைப்படம் தான்.

-விளம்பரம்-

படையப்பா திரைப்படம் ரஜினிகாந்தின் சினிமா வாழ்கையில் ஒரு பெரிய ததாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம் அந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை அப்போது பெற்றிருந்தது. இந்நிலையில் தான் “பாபா” திரைப்படமானது பெரிய எதிர் பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இப்படத்தை பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இவர் இப்படத்திற்கு முன்னரே ரஜினி நடித்திருந்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா போன்ற மாபெரும் வெற்றி படங்களில் இயக்கியிருந்தார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது.

- Advertisement -

படத்தின் படுதோல்வி :

இந்நிலையில் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான “பாபா” திரைப்படமானது முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்மறை கருத்துக்களை பெற்றிருந்தது. இது படக்குழுவினருக்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு மிகபெரிய அதிர்ச்சியாக இருந்தது. பாபா திரைப்படம் தன்னுடைய சொந்த கதை `சொந்த தயாரிப்பு என்பதினால் படத்தினால் உண்டான மொத்த நஷ்டத்தையும் ரஜினிகாந்தே ஏற்றுக்கொண்டு நஷ்டத்தை ஈடுசெய்தார்.

இதேபோல குசேலன் திரைப்படம் தோல்வியிலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் சொந்த செலவில் உதவினார் என்று கூறப்படுகிறது. நாம் இன்று பாபா திரைப்படத்தை தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது இப்படிப்பட்ட படம் எப்படி அந்நாளில் தோல்வியடைந்தது என்ற இன்றும் கேள்வி எழத்தான் செய்கிறது. இந்நிலையில் நினைத்தே பார்க்காத “பாபா” படத்தின் படுதோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் இனி திரைப்படத்தில் நடிக்கவே மாட்டார் என்று அப்போதைய பிரபல நடிகர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள் என்று பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

பார்ட்டி வைத்து கொண்டாடிய நடிகர் :

மேலும் பாபா திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப்படமான “சந்திரமுகி” இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிட்டத்தட்ட 800 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்து. இதன் மூலம் ரஜினிகாந்தை விமர்சித்த நடிகருக்கு காலம் கொடுத்த பதிலடி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இப்படி இவர் கூறியிருக்கும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

நெட்டிசன்களின் விமர்சனம் :

பாபா தோல்வி பற்றிய வீடியோ வைரலான நிலையில் இதற்க்கு பல கேள்விகை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். அதாவது தமிழ் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இவர்களில் ஒருவராகத்தான் இருக்கும் என்றும், அன்றய நிலையில் இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் சந்திரமுகி vs சச்சின் என்று அப்போதே தலைப்பாக வந்திருந்தது எனவும் ஒரு பிரிவினர் கூற. மற்றோரு பிரிவினர் அப்போது விஜய் நடித்திருந்த “சச்சின்” திரைப்படத்தின் வெளியிட்டின் போது கூட நடிகர் விஜய் “பாபா” திரைப்படத்தை பாராட்டினார் என்று கூறுகின்றனர். இதில் எது உண்மை எது பொய் என்று யாருக்குமே தெரியாமல் இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது.

Advertisement