தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அவருடைய அமைதியான குணம் தான் நினைவிற்கு அவரும் இப்படி ஒரு நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய கெத்தை நிரூபிப்பதற்காக விஜய் ரசிகர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து இறந்தார் என்று சமூகவலைதளத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது இதனால் விஜய்யை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபலங்களுக்கு பாதுகாவலராக செல்லும் பாடிகாட் சிலர் கொடுத்த பேட்டி தான் அந்த பேட்டியில் பேசிய அந்த பாடிகார்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் நேர்ந்த ஒரு சம்பவம் குறித்து ஒரு இருந்தார் அதில் பேசிய அவர், ஒரு மிகப் பெரிய நடிகரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை பார்ப்பதற்கு வெளியில் பல நூறு ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தார்கள்.

Advertisement

அவர்களைப் பார்த்த பின்னர் அருகில் இருந்தவரிடம் சொல்கிறார் ‘இப்ப பாரு’ என்று சொல்லிவிட்டு ரசிகர்கள் அருகில் சென்று கை காண்பித்தார். உடனே அந்த வேலலியை எல்லாம் தாண்டி ரசிகர்கள் எல்லோரும் ஓடி வாந்தார்கள். உடனே அவரை அழைத்துக்கொண்டு நாங்கள் கேரவனுக்குள் சென்று விட்டோம். இருந்தாலும் அங்கு இருந்த ரசிகர்கள் போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். அப்போது அவர் என்னை மட்டும் உள்ளே அழைத்து யாரையும் அனுப்ப வேண்டாம் என்று கூறினார்.

பின்னர் கேரவனை விட்டு இறங்கியபோது ‘பாத்தியா நம்மளோட கெத்து’ என்று சொன்னதாக அந்த பாதுகாவலர்கள் பேசியிருக்கிறார். இந்த வீடியோவில் அவர் விஜய்யின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் விஜய் சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் அவருக்காக காத்திருந்த வீடியோ ஒன்றுடன் இவரது பேச்சை இணைத்து இவர் குறிப்பிட்டு பேசிய அந்த பெரிய நடிகர் விஜய்தான் என்று சமூகவலைதளத்தில் பலர் கிளப்பிவிட தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த பாதுகாவலர் மணிகண்டன் என்பவரை நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.

Advertisement

இது குறித்து தெரிவித்த அவர் ‘நான் அந்த வீடியோவில் குறிப்பிட்டு சொன்னது விஜய் சாரை அல்ல. எனக்கு விஜய் சார் மிகவும் பிடிக்கும். இந்த வீடியோ பரவிதிலிருந்தே பலரும் எனக்கு கால் செய்து இதையேதான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் நான் விஜய் ரசிகர் தான் அது மட்டுமல்லாமல் ரசிகர் மன்றத்திலும் நான் இருக்கிறேன். அப்படியிருக்க நான் ஏன் அவரைப் பற்றி சொல்லப்போகிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement
googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1638463181626-0’); });
Advertisement