கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் காட்டுத் தீயை விட வேகமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை எதிர்த்து போலீசார், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து இரவு, பகல் என்று பாராமல் மக்கள் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி , நான்காம் கட்ட ஊரடங்கை பிறப்பித்துள்ளார்.

இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,000தை நெருங்கியது மற்றும் 3720 பேர் பலியாகியும் உள்ளனர். அதே போல் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்து உள்ளது. ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து, கடைகள், மக்களின் பொழுதுபோக்கு இடங்கள், மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

Advertisement

அதே போல படப்பிடிப்புகள் எல்லாம் மூடப்பட்டு உள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதரத்திற்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. பெப்சி அமைப்புக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி வசூலாகி இருப்பதாக கடந்த சில வாரத்திற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் காமெடி நடிகர் விவேக், கொரோனா நிதியாக 1 கோடி கொடுத்தார் என்று ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். அதில், கொரானோ நிவாரண நிதியா விவேக் சார் பிரசன்னா பவுண்டேஷன் மூலமா 1 கோடி ரூபா கொடுத்துருக்காரு விவேக் சார் காமெடி கிங் மட்டும் அல்ல வள்ளல் கிங் கும்தான் என்று பதிவிட்டிருந்தார்.

Advertisement

இந்த ட்வீட் தீயாக பரவுவதற்குள் அந்த ரசிகர் ட்வீட் போட்ட ஒரு மணி நேரத்தில் இதுகுறித்து ட்வீட் செய்த விவேக்,தவறான தகவல். நான் (கொரானா) நிவாரண நிதியாக 5 லட்சம் மட்டுமே அரசுக்குக் கொடுத்தேன் from Sai Prasanna foundation என்று பதிவிட்டுள்ளார். தன்னை பற்றி வந்த தவறான செய்திக்கு உடனடியாக பதில் அளித்த விவேக்கிற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement