விஜய் படத்தின் பிஜிஎமை காப்பியடித்து தான் யுவன் விருமன் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான திகழ்பவர் இளையராஜா. இவருக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். சொல்லப்போனால், இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான்.

மேலும், இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் இசையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான். இவர் தன்னுடைய 16 வயதிலேயே இசைத்துறையில் தன்னுடைய கேரியரை தொடங்கினார். இவர் முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானது சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் தான். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

Advertisement

இவர் இதுவரை 125 படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 2015ஆம் ஆண்டிலே சொந்தமாக தயாரிப்பு ஸ்டுடியோவையும் நடத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கின்றார். அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் விருமன் படத்திற்கும் யுவன் சங்கர் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருக்கிறார். கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘விருமன்’. விருமன் படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது.

மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் விருமன் படத்தில் விஜய் படத்தின் பிஜிஎமை யுவன் காப்பி அடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது, யுவன்சங்கர்ராஜா விஜய்யின் மாஸ் படத்தில் வரும் பிஜிஎமை அப்படியே விருமன் படத்தின் டைட்டில் ட்ராக்கிற்கு யுவன் காப்பியடித்து வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Advertisement

அதுமட்டுமில்லாமல் அதற்கான சில வீடியோ ஆதாரங்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு யுவன் சங்கர் ராஜாவை கிண்டல், கேலி செய்து வருகின்றனர். அதேபோல் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா படத்தின் பிஜிஎம் கூட ஒரு ஆங்கில படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது தான் என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கலாய்த்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் மீண்டும் விருமன் படத்தின் டைட்டிலையும் காப்பி அடித்து இருக்கிறார் யுவன் என்ற தகவல் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

ஆனால், இதற்கு யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் இல்லை என்று மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்தின் பிஜிஎமே சென்னை 28 படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது தான் என்று இன்னொரு வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement