சோனு சூட்டை நேரில் சந்திக்க வெறுங்காலுடன் 700 கிலோ மீட்டர் நடந்து வந்த ரசிகன் – சோனு என்ன செய்துள்ளார் பாருங்க.

0
394
sonu
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கு மேலாக கொரோனா வைரஸ்சால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதக்கப்பட்டும் இருக்கிறது. இதனால் பல்வேறு நபர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள். அதிலும் நடிகர் சோனு சோத் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார். மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

விவசாயி ஒருவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார்.கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப உதவி செய்தார். இதற்கு எல்லாம் மேலாக கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்தி ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்கவும் தட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

இதுபோல பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வரும் சோனுவுக்குப் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட சோனு சூட்டிற்கு சிலை கூட வைத்து தங்களது நன்றிகளை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர், அவரை பார்க்க ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு நடந்தே சென்றுள்ளார். வெங்கடேஷ் என்ற அந்த நபர் சுமார் 700 கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ளார்.வெறுங்காலில் நடந்து வந்ததை அறிந்த சோனுசூட், அந்த ரசிகரோடு புகைப்படம் எடுத்து கொண்டதோடு, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும்,  அவரது சொந்த ஊருக்கு செல்லும் ஏற்படையும் செய்து தந்துள்ளது சோனு சூட்.

நடிகர் சோனு சூட், விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சோனு சூட் ‘தளபதி’ விஜய்யின் ‘நெஞ்சினிலே’, ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் ‘சந்தித்த வேளை’, ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்தின் ‘மஜ்னு, சாகசம்’, ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தின் ‘ராஜா’, நடிகை சிம்ரனின் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘சந்திரமுகி’, ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்புவின் ‘ஒஸ்தி’, ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவாவின் ‘தேவி’ என அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார் சோனு.

-விளம்பரம்-
Advertisement