Digital media stats- சர்கார் 707 கோடி, NGK 196 கோடி, விஸ்வாசம் 138 கோடி..! அசரவைக்கும் டேட்டா

By ·
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா ஆகிய மூவரும் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்களின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதே போல இவர்களது படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானால் சமூக வலைத்தளங்களில் அந்த போஸ்டர்கள் சில நாட்கள் ஆதிக்கம் செலுத்தி வரும். அந்த வகையில் மூன்று ஹீரோக்களின் படங்களும் திரைக்கு வெளிவர தயாராக இருக்கிறது. விஜய்யின் 'சர்கார்', அஜித்தின் 'விஸ்வாசம் ' சூர்யாவின் 'என் ஜி கே' போன்ற படங்கள் தயாராகி வருகின்றது. இதற்காக இந்த படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி இருந்த வண்ணம் இருந்தது. அதில் ட்விட்டரில் எந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எவ்வளவு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளது, எந்த எத்தனை நபர்களால் விரும்பப்பட்டுள்ளது என்ற ஒரு விவரத்தை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் விஜய்யின் 'சர்கார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட நாளில் இருந்து இதுவரை 707 கோடி ரீச்சும், அஜித்தின் 'விஸ்வாசம் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட நாளில் இருந்து இதுவரை 138 கோடி ரீச்சும். , சூர்யாவின் 'என் ஜி கே' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட நாளில் இருந்து இதுவரை 196 கோடி ரீச்சும் அடைந்துள்ளது என்று அந்த ரசிகர் தகவல் வெளியிட்டுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full