மாஸ்டர் பட தயாரிப்பாளர், விஜய் சேதுபதி பட ஹீரோயின் – மாஸ் கூட்டணியில் ஹீரோவாக களமிறங்கிய லியோனியின் மகன்.

0
1400
Leoni
- Advertisement -

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருந்து வருகிறார்கள் விஜய் சூர்யா துவங்கி விக்ரம் மகன் துருவ் வரை தமிழ் சினிமாவில் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருந்து வருகிறார்கள். மேலும், சமீப காலமாகவே தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் கால் தடம் பதித்து வருகிறார்கள். சமீபத்தில்கூட அருண் விஜய்யின் மகன் சூர்யா தயாரிக்கும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஹீரோக்களின் வாரிசு ஒரு பக்கம் நடிகர்களாக களமிறங்கினாலும் இன்னொரு ஒரு காமெடி நடிகர்களும் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் பட்டிமன்ற பேச்சாளரும் நடிகருமான திண்டுக்கல் லியோனின் மகனும் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி பல ஆண்டுகளாக பட்டிமன்றப் பேச்சாளராகவும் நடுவராகவும் திகழ்ந்து வருகிறார் தற்போது பட்டிமன்ற நடுவராக இருந்து வரும் இவர் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வருகிறார் திண்டுக்கல் லியோனி அருண் விஜய் நடிப்பில் வெளியான கங்கா கௌரி என்ற படத்தில் அருண் விஜய்யின் தந்தையாக நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : 25 ஆண்டுகளுக்கு முன் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்.

- Advertisement -

அதன் பின்னர் இவர் ஒரு சில படங்களில் நடித்து இருந்தார் தற்போது இவரது மகன் லியோ சிவகுமார் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்கிறாராம். ஆர். விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்தின் பட பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. ஃபிப்ரவரி 15 ல் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளதாம். இதில் லியோனியின் மகள் மற்றும் மனைவி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. லியோ சிவகுமாரை சினிமாவில் அறிமுகம் செய்தது இயக்குனர் சீனு ராம சாமி தான். யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரித்து, விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகிய ‘மாமனிதன்’ படத்தில் தான் இவர் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement