கோலிவுட்டில் மிகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரின் நடிப்பில் வெளிவந்த அணைத்து படங்களுமே பெரிய ஹிட் கொடுத்துள்ளன. அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில், இணயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் கடந்த வெளியான துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இப்படத்துடன் ஒன்றாக வெளியான விஜய் நடித்த வாரிசு படமும் வெளியாகி இருந்தது.

கதை :

இப்படம் வாங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். அஜித் முன்பு நடித்த படங்களை போல இப்படத்தில் ஒரு குழுவை வைத்து அஜித் கொள்ளையடிக்கிறார? என்றால் அங்கேதான் பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் Your Bank என்ற வங்கியை கொள்ளையர்கள் தங்கள் வசப்படுத்துகின்றனர். வங்கியையும் அங்குள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சமுத்திரக்கனி ஏற்கிறார்.

Advertisement

படத்தின் பாணியில் கொள்ளை :

அவர்களுக்கு சவால் விடும் வேலையே அஜித் செய்து வருகிறார். வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருந்தார். இப்படம் வெளியான பிறகு பல நிகழ்வுகள் நடந்து விட்டனர், இருந்தாலும் துணிவு திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் தணிவு பட பாணியில் வங்கியை கொள்ளையடிக்க ஒருவர் முயற்சி செய்துள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வங்கிக்குள் புகுந்த கொள்ளையன் :

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ரோட்டில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காலை பணிக்காக ஊழியர்கள் வந்துள்ளார். அப்போது திடீரென உள்ளே புகுந்த ஒரு நபர் வங்கி ஊழியர்களின் மீது மிளகாய் பாவ்டர் மற்றும் மயக்க மருந்து ஸ்ப்ரே அடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மயங்கி விழுந்தனர். உடனே அந்த வாலிபர் அங்குள்ள ஊழியர்களின் கைகளை கட்ட முயன்றார்.

Advertisement

தர்மஅடி கொடுத்த மக்கள் :

இந்த சூழ்நிலையில் அவர்கள் கூச்சலிடத்தினால் அங்கு விரைந்த மேலாளர் மற்றும் மற்ற ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து ஒரு அறையில் வைத்து தர்மஅடி கொடுத்தனர். அவர் ஹிந்தியில் பேசியதால் வடமாநிலத்தவராக இருப்பாரோ என்று போலீசிடம் புகாரளித்த நிலையில் அங்கு வந்த அதிவிரைவு படையினரும் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் பூச்ச்நாயக்கன்பட்டியை சேர்ந்த கலில்ரகுமான் என்பது தெரிய வந்துள்ளது.

Advertisement

கொள்ளைக்கான காரணம் :

மேலும் விசாரணை நடத்தியதில் அந்த நபர் பல இடங்களில் வேலை செய்து போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் ஒரு தொகையை கொள்ளையடித்து வாழக்கையில் செட்டிலாக நினைத்துள்ளார் என்பதும், துணிவு படத்தை பார்த்துவிட்டு அதுபோல கொள்ளையடிக்க முயற்சி செய்த்தும் தெரிய வந்துள்ளது. மேலும் வங்கியை கொள்ளையடிக்க இவர் மட்டும்தானா இல்லை இவருடன் கூட்டாளிகள் யாராவது உள்ளனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றார். பட்டப்பகலில் துணிவு பட படத்தை பார்த்து விட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்த்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement