தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் எல்லாம் வேற லெவல். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். பின் வெற்றி மாறன் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திலேயே வெற்றி மாறனுக்கு தேசிய விருது கிடைத்தது.

டெல்லி விமான நிலையம்

இதனை தொடர்ந்து இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்ததே இவர் தான் என்று சொல்லலாம். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றியை கொடுத்தது.

Advertisement

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறன், இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பேசியுள்ளார். அதில், 2011- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் திரையிட்ட பின்னர் இந்தியாவுக்குத் திரும்பவந்தோம் . டெல்லி விமான நிலையத்தில் இமிகிரேஷன்ல இருந்தவர் என்னிடம் இந்தியில் பேசினார். ‘ஸாரி… எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன். ‘கியா, கியா யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?’ன்னு சொன்னார் . நான் ‘என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி. மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்’னு சொன்னேன்.

Advertisement

உடனே அவர் மிகவும் கோபமாகி, ‘நீங்களாம் இப்படித்தான், யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி, நீங்களாம் தீவிரவாதிங்க’ன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்கவெச்சிட்டார். ‘நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றேன். இந்த வருஷம் இவர் தேசிய விருது வாங்கியவர் என்று என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை. 45 நிமிடம் என்னைத் தனியா நிக்கவெச்சிட்டார். பின்னர் வேறு ஒரு அதிகாரி வந்து தான் என்னை அனுப்பினாங்க. என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்? என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் வெற்றிமாறன்.

Advertisement
Advertisement