கிரிக்கெட் வீரருடன் சங்கர் மகளுக்கு திருமணம் - வெளியான மாப்பிள்ளையின் புகைப்படம்.
தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார்.
தற்போது 57 வயதாகும் ஷங்கர் ஈஸ்வரி என்ற பெண்ணை பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர். இப்படி ஒரு நிலையில் ஷங்கரின் மூத்த மகளான விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.
இதையும் பாருங்க : நீ ஒன்னும் ஹன்சிகா இல்லையே ? அட்வைஸ் செய்தவருக்கு ஷாலு பதிலடி.
டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்ய இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரும் தொழிலதிபருமான தாமோதரனின் மகன்தான் இந்த ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது.
29 வயதான ரோஹித், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் விளையாட இடம்கிடைக்காததால் 2015-ல் இலங்கைக்குச் சென்றுவிளையாடியவர். அதன்பிறகு புதுச்சேரி ரஞ்சி அணி கேப்டனாகவும் மாறினார் ரோஹித்.ஐஸ்வர்யா - ரோஹித் திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27, 2021) அன்று மகாபலிபுரத்தில் நடக்க இருக்கிறது. இதில் பல்வேரு சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஷங்கர் மகளின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.