நீ ஒன்னும் ஹன்சிகா இல்லையே ? அட்வைஸ் செய்தவருக்கு ஷாலு பதிலடி.

0
2762
shalu
- Advertisement -

சமூக வளைத்தளத்தில் தற்போது இளசுகளின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவிதாவுடன்  படம் முழுவதும் தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதிலும் பாஜாட்டா நடனம் என்று இவர் ஆண் நண்பர்களுடன் பதிவிட்ட வீடியோ படு வைரலானது.

- Advertisement -

எப்படியும் பட வாய்ப்புகளுக்காக தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார்.ஷாலு ஷம்மு முதலில் நடித்த இரண்டு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை சமூக வலைதளத்தில் பக்கா கிளாமர் பேர் வழியாக தான் இருந்து வருகிறார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்றிற்கு நெட்டிசன் ஒருவர், நீ ஒன்னும் ஹன்சிகா இல்லையே ? நலன் விரும்பியாக சொல்கிறேன் ஒழுங்கா நடந்தால் உன் எதிர் காலத்துக்கு நல்லது என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த ஷாலு ஷம்மு , நான் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. என் எதிர்காலம் என்னுடைய பிரச்சனை. நான் யாருடனும் என்னை ஒப்பிடவில்லை. நீ வேணும்னா உன்னை ஷாருக்கானாகவோ, சல்மான் கான், விஜய், சூர்யானு நெனெச்சிட்டு இருப்ப நீ என் நலன் விருப்பியா என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement