அது விஜய் விருது இல்ல.! விஜய் எருது..! அது விஜய்க்கு மட்டும் தான்..! அமீர் அதிரடி பேச்சு..!

0
1753
vijay-awards
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவரும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி “விஜய் அவார்ட்ஸ்”. பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை செம கலாய் கலாய்த்துள்ளார் இயக்குனர் அமீர்.

-விளம்பரம்-

ameer

- Advertisement -

தமிழ் சினிமாவில் தேசிய வித்து பெற்ற இயக்குனர் அமீர்,” மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன்” என்று 3 ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த மூன்று படங்களுமே தேசிய விருதையும் பெற்றுள்ளது. இயக்குனர் அமீர் சமீபத்தில் தனது சினிமா வாழ்கை பற்றி பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

இந்த பேட்டியின் போது அமீரிடம் எப்படி நீங்கள் இயக்கிய 3 படமும் தேசிய விருதை பெற்றது என்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதில் கூறிய அமீர் “நான் தேசிய விருது பெரும் என்று எண்ணியெல்லாம் படத்தை எடுக்கவில்லை நான் சாதாரணமாக தான் எடுத்தேன்.

-விளம்பரம்-

ஆனால் தற்போது ஒரு சிலர் நடத்தும் விருது விழாக்கள் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது. குறிப்பாக விஜய் டிவியில் நடத்தப்படும் விஜய் அவார்ட்ஸ் அந்த தொலைக்காட்சியை புகழும் பிரபலங்களுக்கே விருதை வழங்குகிறது. அது விருது அல்ல எருது ” என்று கலாய்த்துள்ளார்.

ameer director

இதற்கடுத்து விஜயை வைத்து “கண்ணபிரான் ” படத்தை எப்போது எடுக்கப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு”அந்த படத்திற்காக நானும் காத்துக்க கொண்டு இருக்கிறேன், அந்த படம் விஜய்காக மட்டும் தான். அவரை தவிர வேறு யாரும் சரியாக இருக்க மாட்டர்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement