அது விஜய் விருது இல்ல.! விஜய் எருது..! அது விஜய்க்கு மட்டும் தான்..! அமீர் அதிரடி பேச்சு..!

By Ajju · 30/5/2018
விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவரும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி "விஜய் அவார்ட்ஸ்". பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை செம கலாய் கலாய்த்துள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் தேசிய வித்து பெற்ற இயக்குனர் அமீர்," மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன்" என்று 3 ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த மூன்று படங்களுமே தேசிய விருதையும் பெற்றுள்ளது. இயக்குனர் அமீர் சமீபத்தில் தனது சினிமா வாழ்கை பற்றி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இந்த பேட்டியின் போது அமீரிடம் எப்படி நீங்கள் இயக்கிய 3 படமும் தேசிய விருதை பெற்றது என்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதில் கூறிய அமீர் "நான் தேசிய விருது பெரும் என்று எண்ணியெல்லாம் படத்தை எடுக்கவில்லை நான் சாதாரணமாக தான் எடுத்தேன். ஆனால் தற்போது ஒரு சிலர் நடத்தும் விருது விழாக்கள் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது. குறிப்பாக விஜய் டிவியில் நடத்தப்படும் விஜய் அவார்ட்ஸ் அந்த தொலைக்காட்சியை புகழும் பிரபலங்களுக்கே விருதை வழங்குகிறது. அது விருது அல்ல எருது " என்று கலாய்த்துள்ளார். இதற்கடுத்து விஜயை வைத்து "கண்ணபிரான் " படத்தை எப்போது எடுக்கப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு"அந்த படத்திற்காக நானும் காத்துக்க கொண்டு இருக்கிறேன், அந்த படம் விஜய்காக மட்டும் தான். அவரை தவிர வேறு யாரும் சரியாக இருக்க மாட்டர்கள் " என்று தெரிவித்துள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full