சமீபத்தில் பாஜக கட்சியில் இருந்து காயதிரி ரகுமான் தர்க்காலிகமாக நீக்கப்பட்டதாக நிலையில் தற்போது பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முழுவதுமாக பாஜகவை விட்டு வெளியேறுள்ளார் காயத்ரி ரகுராம். இப்படடிப்பட்ட நிலையில் விடுதலை காட்சிகள் தலைவர் திருமாவளவன் இவருக்கு ஆதரவளித்து ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார்.

பாஜக கட்சியில் கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தவர் காயத்ரி ரகுராம். இவர் தமிழ் நாட்டில் மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்து வந்தார். இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக காயதிரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர் பதவி பெரும் போதும் இவரது பெயர் அடிப்பட்டு விமரிசிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

Advertisement

சர்ச்சைகள் :

இவர் பாஜக கட்சியின் தமிழ் வளர்ச்சி துறையின் தலைவராக இருந்தாலும் காசி தமிழ் சங்கம் உட்பட பல நிகழ்ச்சிகளில் இவரை பாஜக ஒதுக்குவதாக குற்றம் சாட்டி வந்தார். அதோடு தங்கள் கட்சியில் உள்ள மற்ற கட்சியினரின் உளவாளி என்பவர்களில் இவரது பெயர் பலமுறை அடிபட்டு வந்தது. மேலும் சமீபத்தில் நடந்த சூர்யா மற்றும் டெய்ஸி ஆபாச சர்ச்சை விவகாரம் பற்றி காயதிரி ரகுராம் போட்டிருந்த பதிவினால் இவரை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

பாஜகவை விட்டு விலகல் :

இந்த நிகழ்வுக்கு பின்னர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்தார் காயதிரி ரகுராம். மேலும் துபாய் ஹோட்டலில் என்னை 150 பேருக்கு மத்தியில் அசிங்கப்படுத்தியதற்கு பாஜக தலைவர் விளக்கம் சொல்லியே ஆகவேண்டும் என்று கேள்வி எழுப்பி இருந்தார் காயதிரி. மேலும் அண்ணாமலை குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் காயத்ரி ரகுராம்.இந்த நிலையில் தான் பாஜகவை விட்டு விலகுவதாக சமீபத்தில் காயதிரி ரகுராம் அறிவித்திருந்தார்.

Advertisement

சவால் விடும் காயத்ரி :

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை பாஜக தலைவர் அண்ணாமலை அவமான படுத்தியதாகவும் அதிமுக, விசிக என என்ற கட்சிகள் தன்னை அழைத்தாலும் அவர்களுடன் இணைத்து பணிபுரிய தயார் என்று கூறியிருந்தார். இதற்கு விசிக தலைவர் திருமாவளவனும் ஆதரவு அளிக்கும் வகையில் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார். மேலும் சமீபத்தில் தான் ஈரோடு இடை தேர்தலில் அண்ணாமலையுடன் போட்டியிட தயார் என்று சவால் விடும்படி பல கருத்துக்களை கூறிவருகிறார் காயத்ரி ரகுராம்.

Advertisement

இயக்குனர் அமீர் :

இந்த நிலையில் தான் பிரபல தமிழ் சினிமா இயக்குனர் அமீர் ஒரு பேட்டியில் காயத்ரி ரகுராம் பற்றி கூறுகையில் காயத்ரி ரகுராம் பாஜகவை எதிர்த்து அதிக விமர்சங்கள் கூறுகின்றனர். நான் ஒவ்வொரு முறையும் அவருடைய நேர்காணலை பார்க்கும் போதும் அவர் மிகவும் வருத்தப்பட்டு, மனம் காயமடைந்தது பற்றி சொல்கிறார்கள். ஆனால் நான் அவரை பார்த்தால் காயத்ரி ரகுராம் ஒரு மேடையில் நின்று ஏய் திருமாவளவன்? ஏய் திருமாவளவன்? என்று விரலை சுண்டி சுண்டி காலில் ஓன்று இருக்கிறது என்று பேசியிருந்தார் .

எப்படி உங்களால் கூற முடிந்தது :

இதனை குறிப்பிட்ட இயக்குனர் அமர் திருமாவளவன் அவர்களின் அரசியல் என்ன? அவர் இந்த மண்ணோடும், மக்களோடும் பயணித்த பயணம் என்ன? அவரை எப்படி காயத்ரி ரகுராமினால் சொடக்கு போட்டு போகிற போக்கில் இப்படி அவரை குறை முடிந்தது? என்று கேள்வி எழுப்பியிருந்தார் இயக்குனர் அமீர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement