நள்ளிரவில் மக்களை சந்திக்கும் விஜய்.! ரஜினி விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.! அமீர் அறிவுரை.!

0
1618
Ameer
- Advertisement -

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நடிகர் விஜய், நேற்றிரவு தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். போரட்டத்தின் போது உயுரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு 1 லட்ச ருபாய் உதிவித்தொகையையும் வழங்கியுள்ளார். விஜய்யின் இந்த செயலை பாராட்டியுள்ள இயக்குனர் அமீர், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவது எப்படியென்று விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

vijay 3

- Advertisement -

சமீப காலமாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் விஜய், எதாவது பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் போது எந்தவித ஊடகதிற்கும் தெரிவிக்காமல், எந்த வித முன்னறிவிப்பையும் இன்றி சென்று மக்களை சந்திக்கிறார். பகலில் சந்தித்தால் ஊடகத்தின் கண்களில் பட்டுவிடுவோம் என்று பெரும்பாலும் இரவிலேயே சென்று மக்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்.

சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மக்களை ரஜினி நேரில் சென்று சந்தித்தார். ஆனால் அவர் தூத்துக்குடிக்கு மக்களை சந்திப்பதற்கு முன்பாகவே அவர் தூத்துக்குடிக்கு செல்லும் விஷயம் அனைத்து மக்களும், ஊடகங்களும் அறிந்திருந்தனர். இதனை பலரும் அவர் விளம்பரத்திற்காக தான் செய்கின்றார் என்று குறை கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்த போதும் ரஜினியை ஒரு இலைஞர் ‘நீங்கள் யார் எதற்காக இப்போது வந்தீர்கள் ? என்று சரமாரியான கேள்விகளை கேட்டு ரஜினியின் மூக்கை உடைத்தார்.

-விளம்பரம்-

ameer

ஆனால் விஜய் மக்களை சந்திக்க செல்லும் போது எந்தவித விளம்பரமும் இல்லாமல் நள்ளிரவில் செண்டிருக்கிறார், அதுமட்டுமின்றி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை அங்கிருக்கும் தனது ரசிகர்களுடன் இருச்சக்கர வாகனத்தில் எளிமையாக சென்றிருக்கிறார். அதுவும் ஒவ்வொரு வீட்டின் கதவை தட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவரை புகைப்படம் எடுக்க முனைத்தவர்களிடமும் வேண்டாம் என்று கூறியுள்ளார். நடிகர் விஜய் தூத்துக்குடி மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதை பார்த்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

Advertisement