இளம் வயதில் மரணமடைந்த மகன். பிரபல இயக்குனர் ராஜ் கபூருக்கு ஏற்பட்ட சோகம்.

0
28369
rajkapoor
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் ராஜ் கபூர். இவர் நடிகர் பிரபு, நடிகை கனகா நடிப்பில் வெளியான தாலாட்டு கேட்குதம்மா என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின் இவர் சின்ன ஜமீன், வள்ளல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். இதனை தொடர்ந்து இவர் உத்தமராசா, சுதந்திரம், என்ன விலை அழகே, சமஸ்தானம், குஸ்தி உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். ராஜ் கபூர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வம்பு சண்டை. மேலும், இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for director raj kapoor

- Advertisement -

இவர் ஆனந்த பூங்காற்றே, தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, வாஞ்சினாதன், தென்னவன், விசில், அய்யா, ஆறு, அரண்மனை 2, வாகா, கொடி, மாயாண்டி குடும்பத்தார், முத்தக்கு முத்தாக உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் நடித்து உள்ளார். அதுமட்டுமின்றி இவர் சீரியல்களிலும் நடித்து உள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல், ராசாத்தி சீரியல், ரன் சீரியல் என பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஷைலஜா கபூர் என்ற மனைவியும் ஷாரூக் கபூர் என்ற ஒரு மகனும் மற்றும் ஷமிமா கபூர் மற்றும் ஷானியா கபூர் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று இயக்குனர் ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் காலமானார் என்று சோசியல் மீடியாவில் தகவல் வந்து உள்ளது. ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் அவர்களுக்கு ஏற்கனவே மூச்சு தினறல் பிரச்சனை இருந்து உள்ளது. பின் இவர் தனது தாயாருடன் புனித பயணத்திற்கு மெக்கா சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு கடுமையான சளி மற்றும் மூச்சு தினறல் ஏற்பட்டு உள்ளது. பின் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார். தற்போது ஷாருக் கபூரின் உடலை மெக்காவிலேயே நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குநர் ராஜ்கபூர் மெக்கா செல்கிறார்.

-விளம்பரம்-
Image result for director raj kapoor son

சமீபத்தில் தான் ஷாருக் கபூரை சினிமாவில் அறிமுகம் செய்வதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில் ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் மரணம் யாராலையும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இவருக்கு தற்போது 23 வயது ஆகி இருக்கிறது. இந்த சிறு வயதில் இறந்தது அவர் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும், கோலிவுட் வட்டாரமே சோகத்தில் உள்ளது. மரணமடைந்த ஷாரூக் கபூர், இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement