அம்பானி வீட்டு திருமணத்தில் அட்லீ மனைவி செய்திருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகளவில் மிகப் பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர் ஆவார். இவர் நீடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் ஆகாஷ், நிஷா ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது.

தற்போது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சாண்ட் என்பவரை தான் ஆனந்த் திருமணம் செய்கிறார். கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. பின் திருமணத்திற்கு முந்தையதாக நடைபெற இருக்கும் விழாக்கள் நடந்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் தான் இந்த விழா தொடங்கி இருந்தது.
முகேஷ் அம்பானி மகன் திருமணம்:
இதில் இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவுகள், கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். அதேபோல் இந்தியாவில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரையிலுள்ள ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண், ரஜினி, இயக்குனர் அட்லீ என பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

திருமண நிகழ்வுகள்:
தற்போது திருமண வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை ராதிகா- ஆனந்த் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடந்து இருக்கிறது. இதனால் குஜராத் மாநிலம் ஜாம் நகரிலும் ,வெளிநாடுகளிலும் திருமணத்திற்கு மாநிலம் கொண்டாடுங்கள் நடைபெற்றிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பே சங்கீத் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
திருமணம் குறித்த தகவல்:
பின் மெஹந்தி விழாவும் கோலாகலமாக நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் அம்பானி வீட்டு திருமணத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள பல பிரபலங்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் அம்பானி. மேலும், 12 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி தேதியில் திருமணம் கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரம்மாண்டமாக நடந்த ஆனந்த், ராதிகாவின் திருமணத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலருமே கலந்துகொண்டிருந்தார்கள்.
https://youtube.com/shorts/aAA-3s-MLYs?si=qWW5_gafe24-Wp3I
அட்லீ மனைவி குறித்த தகவல்:
அந்த வகையில் தமிழ் திரையுலகை சேர்ந்த அட்லீ தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து திருமணத்தில் கலந்துகொண்டார். தமிழ் திரையுலகில் உள்ள இயக்குனர்களில் இவர் மட்டும்தான் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருமண விழாவில் போட்டோ எடுக்கும் போது அட்லி தன்னுடைய மனைவி திரும்பி காண்பிக்க சொல்லியிருந்தார். அதில் Anant's Brigade என்று எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு ஆனந்தின் ஆர்மி என்று அர்த்தம். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.






