Sex Education பற்றி வாய் கிழிய பேசிய பாக்கியராஜ் – பட்டிமன்ற மேடையில் பெண்கள் குறித்து பேசிய சர்ச்சை கருத்து.

0
968
bhagyaraj
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் சிறந்த திரை கதை இருக்கும் படங்களை எடுப்பது தான் பாக்கியராஜின் தனி சிறப்பு. தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் நடிகராகவும் கொடிகட்டி பறந்தார். மேலும், இவரது படங்களில் பல டபுள் மீனிங் வசனங்கள் இடம்பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

வெண்ணிற ஆடை மூர்த்திக்கு பின் டபுள் மீனிங் காமடிகளை அதிகம் செய்தது பாக்கியராஜ் தான். தற்போது பாக்யராஜ் அவர்கள் sex education பற்றி குழந்தைகளுக்கு வலியுறுத்தும் வகையில் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்று இருந்தார். மேலும், நெட்ப்ளிக்ஸ் உடன் இணைந்து பாக்யராஜ் அவர்கள் sex education குறித்து வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் அவர் தமிழ் சமூகம் எப்படி செக்ஸ்சை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறது என்றும் குழந்தைகள் முன் செக்ஸ் பற்றி பேசக் கூடாது என்ற கருத்தை உடைப்பது குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதனால் பாலியல் தொடர்பான குற்றங்களை தவிர்க்க பாலியல் பற்றி பேசவும் அதைப்பற்றி குழந்தைகள் கற்பிக்கவும் பாக்கியராஜ் மக்களுக்கு வலியுறுத்தி இருக்கிறார். அந்த வீடியோவில் பாக்யராஜ் சொல்லி இருப்பது, பாக்யராஜ் தன் நண்பர்களுடன் உட்கார்ந்து sex என்ற வார்த்தையே தவறு என்று சொல்லுமளவிற்கு குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைக்கிறார்கள் என்று பல விஷயங்களை கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளது.

இதற்கு பலரும் ஆதரவு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் rape case தொடர்பாக பாக்கியராஜ் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் பாக்கியராஜ் கூறியிருப்பது, கோயம்புத்தூரில் ஒரு முறை வழக்கறிஞர் ஒருவர் கோர்ட்டுக்கு வரும்போது rape கேசில் எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் என்று ஒருவர் கேட்டிருக்கிறார். அப்போது அவர் என்ன செய்வது என்று புரியாமல் சம்பந்தப்பட்ட நபரிடம் ஊசி கொடுத்து ஊசி நுழையும் கோருங்கள் என்று சொல்லி இருக்கிறார். அப்போது அவர் தடுமாறியிருக்கிறார்.

-விளம்பரம்-

உடனே வழக்கறிஞர் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று சொல்லி அந்த கேசை முடித்து விட்டார் என்று பேசி இருந்தார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் கிஷன் தாஸ் என்பவர் பாக்கியராஜின் sex eduction வீடியோ குறித்து பாராட்டி கருத்து பதிவிட்டிருந்தார். பின் அந்த ட்வீட்டை டெலிட் செய்தார். உடனே அவர் வருத்தம் தெரிவித்து ஒரு கருத்தை பதிவுசெய்து உள்ளார்.

Advertisement