பிரபல நடிகர் நடிகையின் திருமணத்தில் தன் குடும்பத்துடன் கலந்துகொண்ட GVM – இவர் தான் அவரின் மனைவியா ?

0
226
gautham
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ இயக்குனர்கள் தற்போது நடிகர்களாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் கெளதம் மேனனும் ஒருவர். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் தமிழ் கௌதம் மேனனும் ஒருவர் இவர் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்திருக்கிறது. அதிலும் போலீஸ் ஸ்டோரி என்றால் நிச்சயம் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், சமீபகாலமாக இவர் இயக்கிய எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் கெளதம் மேனனை விட நடிகர் கெளதம் மேனனை தான் அதிகம் பேருக்கு பிடிக்கும்.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.பிறந்தது பாலக்காடு என்றாலும் வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். கல்லூரியில் படித்துக்கொண்டே சினிமாவில் ஏற்பட்ட ஏற்பு காரணமாக கதைகளை எழுக ஆரம்பித்தார். பெற்றோர்களுக்கும் இவரது கனவிற்கு உதவிசெய்ய 2000ஆம் ஆண்டு உலாலா என்ற படத்தை இயக்கினார். பின்னர் இவர் இயக்கிய மின்னலே திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

இப்படத்திற்கு பின்னர் சூர்யா ஜோதிகா நடித்த காக்க காக்க என்ற திரைப்படத்தினை இயக்கினார். இப்படமானது பெரும்வெற்றியை படக்குழுவிற்கு தந்தது மேலும் இப்படமானது ஹிந்தி மொழியிலும் உருவாக்கபட்டது. மேலும் இப்படமானது இவரின் திரை வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக இருந்தது. இப்படத்தை தொடர்ந்து காதல், ரோமன்ஸ் சேர்ந்து உருவாக்கப்பட்ட கமலஹாசன் நடித்திருந்த வேட்டையாடு விளையாடு திரைப்படமானது பெரிய அளவில் மெகா ஹிட் அடித்து. இது இயக்குனர் கௌதம் மேனனின் மூன்றாவது வெற்றித்திரைப்படமாகவும்.

மேலும் திரைப்படங்களில் இயக்குனராக மட்டும்மில்லாமல் நடிகராகவும் தன்னுடைய நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படங்களுக்கு பின்னர் ஹிந்தி சினிமாவில் ஷாருக்கானை வைத்தும் திரைபடங்களை இயக்கிய இவர் சமீபத்தில் வெளியான நவரச என்ற வெப் சீரிஸ்களையும் இயக்கியுள்ளார். இயக்குனர் மற்றும் நடிகரான கெளதம் மேனன் ப்ரீத்தி மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஆர்யா, துருவ் மற்றும் ஆதி என்ற 3 மகன்களும் உள்ளனர்.

-விளம்பரம்-

இப்படி பிரபலமாக இருக்கும் இயக்குனர் கெளதம் மேனன் அதிகமாக தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசியதில்லை. இந்நிலையில் பிரபல நடிகர் கார்த்திக் முத்துராமன் மகனான கவுதம் கார்த்தி நடிகை மஞ்சிமாவை காதலித்து வந்த நிலையில் நேற்று நடிகர் கவுதம் கார்த்திக் மாற்றும் நடிகை மஞ்சிமாவின் திருமணம் மிக கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்கினார் கெளதம் மேனனும் தன்னுடைய மனைவி மற்றும் துணை இயக்குனர்களுடன் கவுதம் கார்த்தி நடிகை மஞ்சிமா திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement