ஒரு மகள் டாக்டர் இன்னொரு மகள் சொந்த தொழில் – கே எஸ் ரவிகுமாரின் இரண்டு மகள்கள்.

0
1686
- Advertisement -

கே எஸ் ரவிக்குமார் மகள்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரமிக்க வைக்கும் பல பிரமாதமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் கே. எஸ். ரவிகுமார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் குமார், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

அதோடு இவரை சீனியர் டைரக்டர் என்று கூட சொல்லலாம். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனை படைத்து உள்ளது. மேலும், இவர் தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பார். இது வழக்கமான ஒன்றாக கே. எஸ். ரவிகுமார் வைத்து உள்ளார். கே. எஸ். ரவிகுமார் அவர்கள் முதன் முதலில் இயக்குனர் விக்ரமன் இடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

- Advertisement -

கே. எஸ். ரவிகுமார் திரைப்பயணம்:

அதற்கு பிறகு தான் இவர் புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், இவர் இயக்கிய பல படங்கள் பிளாக் பஸ்டர் தான்.

கே. எஸ். ரவிகுமார் நடித்த படங்கள்:

மேலும், சமீப காலமாக இவர் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வருகிறார். இவர் வில்லன், குணசித்திர வேடங்களில் மிரட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இருவரின் இயக்கத்தில் வெளியாகியிருந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா, மாரியப்பன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கே.எஸ்.ரவிகுமாரின் மகள்கள்:

இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து இவர் படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே கே எஸ் ரவிக்குமார் அவர்கள் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜஸ்வந்தி, மோனிஷா என்று மகள்கள் உள்ளார்கள். இதில் மோனிஷா தற்போது சென்னையில் புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்து உள்ளார். மோனிஷா அவர்கள் டாக்டர் படிப்பை படித்து இருக்கிறார்.

கேஸ் ரவிக்குமார் மகள்களின் புகைப்படம்:

இவருடைய கணவர் அரவிந்த் அவர்களும் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கே எஸ் ரவிக்குமாரின் மற்றொரு மகளான ஆனந்தி அழகு சாதன பொருட்களை விற்கும் தொழிலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கே எஸ் ரவிக்குமார் தன்னுடைய பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதேபோல் கேஸ் ரவிக்குமார் மகள்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement